தவானை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி.. இளம் வீரரும் காயத்தால் விலகல்.. என்ன நடக்கிறது இந்திய அணியில்?
Recommended Video
லண்டன்: இந்திய அணியில் தவானை தொடர்ந்து இளம் வீரர் விஜய் சங்கரும் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தொடர்ந்து காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். முதலில் தவான் கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார்.
அதன்பின் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக மூன்று போட்டிகளாக விளையாடாமல் இருக்கிறார். தற்போது விஜய் சங்கர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி உள்ளார்.

என்ன நீக்கம்
இந்திய அணியில் நான்காவது வீரராக ஆடியவர்தான் விஜய் சங்கர். இந்த நிலையில் அணியில் இருந்து விஜய் சங்கர் நேற்று நீக்கப்பட்டார். மூன்று போட்டிகளில் இவர் இந்திய அணிக்காக விளையாடினார். நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாடிய இவர் தொடர்ந்து சொதப்பி வந்தார். முக்கியமாக மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இவர் மோசமாக விளையாடினார்.

வாய்ப்பு இல்லை
இவருக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தது. இதனால் நேற்று போட்டியிலேயே இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவருக்கு பதில் அணியில் பண்ட் தேர்வு செய்யப்பட்டு விளையாடினார். பண்ட் நேற்று போட்டியில் நன்றாகவே ஆடினார். காயம் காரணமாக விஜய் சங்கரை அணியில் எடுக்கவில்லை என்று கோலி நேற்று பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது உண்மை
ஆனால் கோலி பொய் சொல்கிறார், விஜய் சங்கர் சரியாக ஆடவில்லை என்றுதான் நீக்கப்பட்டு இருக்கிறார், காயம் எல்லாம் இல்லை என்று செய்திகள் வந்தது. தற்போது கோலி சொன்னது உண்மைதான் என்று நிரூபணம் ஆகியுள்ளது. விஜய் சங்கருக்கு உண்மையிலேயே காயம் ஏற்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கால் விரலில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.

யார் வந்தார்
பயிற்சியின் போது பும்ரா போட்ட யார்க்கரால் அவருக்கு கால் விரலில் காயம் ஏற்பட்டது. இது சரியாகாமல் இருந்தது. இதனால் தற்போது இவர் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இவருக்கு பதிலாக இந்திய அணி புதிய வீரரை தேர்வு செய்ய திட்டமிட்டு உள்ளது.

புதியவர்
பெரும்பாலும் இந்திய அணியில் ஷேரேயேஸ் ஐயர் அணிக்குள் வருவார் என்று கூறுகிறார்கள். இவர் நல்ல தொடக்க ஆட்டக்காரர். டெல்லி ஐபிஎல் அணியின் கேப்டனாக இருக்கிறார். அவர் இல்லையென்றால் இந்திய அணிக்குள் மயங்க் அகர்வால் வர வாய்ப்புள்ளது. கர்நாடகாவை சேர்ந்த இவர் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.


Click it and Unblock the Notifications