கடுப்பில் திட்டிய தோனி.. கோபத்தில் முடிவெடுத்த கோலி.. ஒரு வீரரால் நேற்று போட்டியில் நடந்த குழப்பம்!
Recommended Video
லண்டன்: நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி இந்தியாவின் மெயின் பவுலர்களை மட்டுமே பயன்படுத்தினார். பார்ட் டைம் பவுலர்கள், ஆல் ரவுண்டர் (பாண்டியா தவிர) யாரையும் போட்டியில் பந்துவீசவே அனுமதிக்கவில்லை. நேற்று கோலி கோபமாக நிறைய முடிவுகளை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த லீக் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக சென்றது .
இந்த போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மொத்தமாக 50 ஓவர் பிடித்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 224 ரன்கள்தான் எடுத்தது.

மிக மோசம்
சென்ற போட்டி போலவே இந்த போட்டியிலும் விஜய் சங்கர் பெரிய அளவில் ஏமாற்றம் அளித்தார்.தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை நிரூபிக்காமல் விட்டுவிட்டார். நேற்று அவர் 4வது வீரராக களமிறங்கினார். ஆனால் இவர் சரியாக விளையாடவில்லை. 41 பந்துகள் பிடித்த அவர் ஆமை வேகத்தில் மிகவும் மெதுவாக வெறும் 29 ரன்கள்தான் எடுத்தார்.

எப்படி பீல்டிங் மோசம்
அதேபோல் நேற்று இவர் சரியாக பீல்டிங்கும் செய்யவில்லை. இரண்டு கேட்ச்களை விட்டார். ஆப்கானிஸ்தானின் மிக முக்கியமான வீரரான நபியின் கேட்சை விட்டார். அதேபோல் ஹஷ்மதுல்லா ஷாகிதி அடித்த பந்து ஒன்று எட்ஜ் ஆகி மேலே பறந்தது. ஷார்ட் தேர்ட் மேன் திசையை நோக்கி பந்து பறந்தது. அப்போது டீப் பேக்வேர்ட் பாயிண்ட் திசையில் விஜய் சங்கர் நின்று கொண்டு இருந்தார்.

கோபம்
ஆனால் அந்த பந்தை பிடிக்க கூட விஜய் சங்கர் விருப்பப்படவில்லை. மிகவும் மெதுவாகத்தான் அவர் ஓடி வந்தார். இது களத்தில் எல்லோரும் அதிர்ச்சி அளித்தது. தோனியே கோபப்பட்டு அவரை திட்டினார். ஏன் இப்படி மெதுவாக ஓடுகிறீர்கள் என்று சைகையில் அவரை திட்டினார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

கோலி எப்படி
இப்படி இரண்டு கேட்ச்களை விட்டதால் கோலியும் விஜய் சங்கர் மீது கோபத்தில் இருந்தார். நேற்று இவருக்கு ஓவரும் வழங்கப்படவில்லை. ஒரு ஓவர் கூட கோலி இவருக்கு வழங்கவில்லை. இவர் விக்கெட் எடுத்தாலும் அதிகமாக ரன் கொடுப்பதால் ஓவர் வழங்கப்படவில்லை. இந்திய அணியின் மெயின் பவுலர்களான சாஹல், பும்ரா , ஷமி, குல்தீப் ஆல்ரவுண்டர் பாண்டியா ஆகியோர் மட்டுமே நேற்று பந்து வீசினார்கள்.

வாய்ப்பு இருக்காது
கூடுதல் பவுலிங் ஆப்ஷன் இல்லாமல் எப்படி இந்திய அணி செயல்படுகிறது என்றும் கோலி இந்த போட்டியில் சோதனை செய்தார். இது நன்றாகவே வேலை செய்து இருக்கிறது. இதனால் கோலி பெரும்பாலும் 4 வது இடத்தில் ஆல் ரவுண்டருக்கு பதில் சுத்தமான பேட்ஸ்மேனை இறக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலும் விஜய் சங்கருக்கு பதில் தினேஷ் கார்த்திக் அல்லது பண்ட் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications