Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 வருடத்திற்கு பின் பாக். இறக்கிய அந்த வீரர்.. அவரின் ஒரே ஓவர்தான் மேட்சை மாற்றியது.. மாஸ் பிளான்!

Recommended Video

WC 2019: ENG Vs PAK: Wahab riyaz: 2 வருடங்களுக்கு பிறகு அசத்தல் கம் பேக் கொடுத்த வஹாப் - வீடியோ

லண்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வஹாப் ரியாஸ் இரண்டு வருடங்களுக்கு பின் கிரிக்கெட் களத்திற்கு வந்தாலும் நேற்று மிகவும் சிறப்பாக ஆடி இருக்கிறார்.

நேற்று இங்கிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.

348 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை 334 ரன்களில் மடக்கி வெற்றிபெற்றது. இது பாகிஸ்தான் அணிக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

யார் இவர்

யார் இவர்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், பெரிய கோப்பைக்காக நடக்கும் போட்டிகளில் எல்லாம் எப்போதும் பாகிஸ்தான் அணி எடுக்கும் பவுலர்தான் வஹாப் ரியாஸ். ஆனால் இவர் கடைசியாக இரண்டு வருடங்களாக கிரிக்கெட் போட்டிகளில் எதிலும் கலந்து கொள்ளவில்லை. ஆம், இரண்டு வருடங்கள் அவர் வாய்ப்பிற்காக ஏங்கிக்கொண்டு இருந்தார்.

என்ன செய்தார்

என்ன செய்தார்

2011 உலகக் கோப்பை போட்டியில் செமி பைனலில் இந்தியாவிற்கு எதிராக இவர்தான் ஐந்து விக்கெட் எடுத்தது. அப்போதே இந்திய பேட்ஸ்மேன்களை இவர்தான் மிரட்டியது. அதன்பின் 2015 உலகக் கோப்பியா போட்டியிலும் மிகவும் சிறப்பாக விளையாடினார். அந்த தொடர் முழுக்க இவர் ஆடியது பெரிய வரவேற்பை பெற்றது.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

அதன்பின் 2017 சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் கோப்பை வென்றது. அதற்கு வஹாப் ரியாஸ் பவுலிங் முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் வஹாப் ரியாஸ் சரியாக பவுலிங் போடவில்லை என்று தவறாக குற்றச்சாட்டு வைத்து அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதில் இருந்து இரண்டு வருடங்கள் வஹாப் ரியாஸ் அணியில் சேர்க்கப்படவில்லை.

இல்லை

இல்லை

அதன்பின் பாகிஸ்தான் அணியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய வெற்றிகள் கிட்டவில்லை. நேற்றைய வெற்றிக்கு முன் தொடர்ந்து பத்து ஆட்டங்கள் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது, 350 ரன்களை கூட அந்த அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அணியில் எடுத்தனர்

அணியில் எடுத்தனர்

இதனால் இரண்டு வருடங்களுக்கு பின் வஹாப் ரியாஸ் நேற்று அணியில் எடுக்கப்பட்டார். முதலில் உலகக் கோப்பை அணியில் இல்லாத அவர் கடைசி நேரத்தில் அணிக்குள் கொண்டு வரப்பட்டார். அவர் அணிக்குள் கொண்டு வரப்பட்டதே பெரிய ஆச்சர்ய விஷயமாக இருந்தது. ஆனால் 2 வருடங்களுக்கு பின்பும் தான் சிங்கம்தான் என்பதை அவர் நிரூபித்து இருக்கிறார்.

எப்படி போட்டார்

எப்படி போட்டார்

நேற்று இவர் 10 ஓவர் போட்டு 82 ரன்கள் கொடுத்தார். இவர் முதலில் ஜானி பிரெய்டோவின் விக்கெட்டை எடுத்தார். இவர் போட்ட 47வது ஓவரில்தான் ஆட்டத்தின் போக்கு மாறியது. அந்த ஓவரில் இவர் மெயின் அலி, கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் விக்கெட்டை அடுத்தடுத்து எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கனவு கலைந்து போனது. இவர்கள் இருந்திருந்தால் அந்த அணி வென்று இருக்கும்.

இவர் முக்கியம்

இவர் முக்கியம்

இந்த உலகக் கோப்பை தொடர் முழுக்க ரியாஸ் முக்கியமான வீரராக இருக்க போகிறார். இவர் என்ன செய்ய போகிறார். இவர் எப்படி பவுலிங் போட போகிறார் என்பதை பொறுத்தே பாகிஸ்தான் அணியின் வெற்றி இருக்க போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கெத்து காட்டுங்கள் மிஸ்டர் வஹாப் ரியாஸ்.

Story first published: Tuesday, June 4, 2019, 11:21 [IST]
Other articles published on Jun 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+