பிக்சிங்.. உங்கள் லட்சணம் தெரிந்துவிட்டது.. இந்திய அணியை மோசமாக விமர்சித்த வாக்கர்.. பரபரப்பு!
லண்டன்: இந்திய அணி நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக மோசமாக விளையாடியதற்கு பின் நிறைய காரணம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாக்கர் யூனிஸ் செய்த டிவிட் வைரலாகி இருக்கிறது.
இந்தியா இங்கிலாந்து போட்டி நேற்று மிகவும் பரபரப்பாக நடந்தது. இந்தியாவிற்கு எதிராக மொத்தம் 50 ஓவரில் இங்கிலாந்து அணி 337 ரன்களை குவித்தது.
ஆனால் இந்தியா ஐம்பது ஓவரில் 306 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் இந்த தொடரில் இந்தியா தனது முதல் தோல்வியை தழுவியது.

பாகிஸ்தான்
இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால், பாகிஸ்தான் அணிக்கான செமி பைனல் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அடுத்த போட்டியில் கண்டிப்பாக இங்கிலாந்து நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. அப்போதுதான் பாகிஸ்தான் அணியால் வங்கதேசத்திடம் வென்று செமி பைனலுக்கு செல்ல முடியும்.

கஷ்டம்
இதனால் நேற்று போட்டியில் இந்திய அணிக்கு பாகிஸ்தான் ரசிகர்கள் பெரிய அளவில் ஆதரவு அளித்தனர். இந்தியா வெற்றிபெற வேண்டும் என்று வேண்டினார்கள். ஆனால் இந்தியா இதில் மோசமாக தோல்வியை தழுவியது. இது பாகிஸ்தான் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

என்ன புகார்
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வீரர் வாக்கர் யூனிஸ் இதுகுறித்து டிவிட் செய்துள்ளார். அதில், நீங்கள் யார் என்பது முக்கியமில்லை. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும். பாகிஸ்தான் அணி செமி பைனலுக்கு செல்லவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனால் சில வீரர்களின் நேர்மையான போட்டி மனப்பான்மை நேற்று சோதிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் அதில் மோசமாக தோல்வி அடைந்துவிட்டார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஐயோ கடவுளே
அதாவது இந்தியா வெல்ல கூடாது என்று வேண்டும் என்றே விளையாடியது. இந்தியாவின் ஆட்டத்தில் நேர்மை இல்லை என்பதை இவர் மறைமுகமாக குற்றஞ்சாட்டி இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். அவர் ''சிலர்'' என்று தோனியைத்தான் குறிப்பிடுகிறார் என்றும் சிலர் கூறி வருகிறார்கள். அதாவது பாகிஸ்தான் செமி பைனலுக்கு செல்ல கூடாது என்று வீரர்கள் இப்படி மோசமாக விளையாடி இருக்கிறார்கள் என்று இவர் மறைமுகமாக கூறியுள்ளார் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

மோசம்
இதற்கு தற்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். வாக்கர் யூனிஸ் வேண்டும் என்றே இந்திய அணி மீது பிக்சிங் செய்வதற்கு இணையான புகார் எல்லாம் வைக்கிறார். இதை ஏற்றுக்கொள்ள கூடாது என்று ரசிகர்கள் டிவிட் போட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications