Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சதி.. அவர் வேண்டுமென்றே அப்படி செய்தார்.. இந்திய அணிக்கு எதிராக செயல்பட்ட நடுவர்? திடுக் புகார்!

Recommended Video

WORLD CUP 2019: IND VS AFG | கோலிக்கு மீண்டும் எச்சரிக்கை,நடவடிக்கை எடுக்க ஐசிசி திட்டமா?- வீடியோ

லண்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நடுவர் ஒருவர் நடுநிலையாக செயல்படவில்லை என்று இந்திய ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள்.

கடந்த சனிக்கிழமை இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி இறுதி வரை மிகவும் விறுவிறுப்பாக சென்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 50 ஓவர் பிடித்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 224 ரன்கள்தான் எடுத்தது. 213 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து ஆப்கானிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

இந்த போட்டியில் முக்கியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. 29 வது ஓவரில் ஆப்கானிஸ்தான் வீரர் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால் அதற்கு நடுவர் அலீம் டெர் விக்கெட் கொடுக்கவில்லை. இந்தியாவிற்கு இருந்த டிஆர்எஸ் வாய்ப்பும் ஏற்கனவே முடிந்துவிட்டது. இதனால் கோலி அலீம் டெர்ரிடம் இதுகுறித்து வாதம் செய்தார்.

நீண்ட நேரம்

நீண்ட நேரம்

நீண்ட நேரம் கோலி நடுவரிடம் வாதம் செய்தார். இது சரியான விக்கெட்தான் என்று மீண்டும் மீண்டும் கேட்டார். இதனால் ஆட்டம் கொஞ்ச நேரம் பாதித்தது. அதன்பின்பும் நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை என்றதும் கோலி தனது இடத்திற்கு சென்றார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

என்ன அபராதம்

என்ன அபராதம்

இந்த நிலையில் அந்த நடுவரிடம் சண்டை போட்டதற்காக கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இவருக்கு எதிராக பிளாக் மார்க் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. கோலி தான் செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டு இருக்கிறார் என்றும் ஐசிசி தெரிவித்து இருக்கிறது.

என்ன எதிர்ப்பு

இந்த நிலையில் தற்போது அந்த நடுவர் அலீம் டெர்ருக்கு எதிராக பலர் கருத்து தெரிவிக்க தொடங்கி இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் இந்தியா போட்டியில் அலீம் கொஞ்சம் கூட நியாயமாக செயல்படவில்லை. தொடர்ந்த தவறான முடிவுகளை அளித்து வந்தார் என்று குற்றச்சாட்டது வைத்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் அவர் பாகிஸ்தான் அதனால்தான் இப்படி செயல்படுகிறார் என்றும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

Story first published: Monday, June 24, 2019, 12:03 [IST]
Other articles published on Jun 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+