நீங்க ஒன்னும் அவ்ளோ பெரிய ஆள் இல்லை.. எளிதாக வீழ்த்திடுவோம்.. இந்தியாவை சீண்டும் இங்கிலாந்து வீரர்!
Recommended Video
லண்டன்: இந்தியாவிற்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து அணி எப்படி வெல்லும் என்று இங்கிலாந்து முன்னணி வீரர் பென் ஸ்டோக்ஸ் பேட்டி அளித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் இந்தியா அடுத்து மோத போகும் போட்டிகள் எல்லாம் மிக முக்கியமான போட்டிகள் ஆகும். மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய முக்கிய அணிகளை இந்தியா இந்த தொடரில் வரிசையாக எதிர்கொள்ள இருக்கிறது.
இதில் இந்தியா 3 போட்டிகளில் வெற்றிபெற்றால் கூட எளிதாக செமி பைனலுக்கு சென்றுவிடும். இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி 30ம் தேதி நடக்கிறது.

என்ன பேட்டி
இந்த நிலையில் இந்த போட்டி குறித்தும், இங்கிலாந்து அணியின் தொடர் தோல்வி குறித்தும் அந்நாட்டு வீரர் பென் ஸ்டோக்ஸ் பேட்டி அளித்துள்ளார். அதில் , நாங்கள் மூன்று போட்டியில் தோல்வி அடைந்துவிட்டோம். அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் ஒன்று சொல்கிறேன். நாங்கள் கடந்த நான்கு வருடமாக நல்ல பார்மில் இருக்கிறோம். இரண்டு, மூன்று போட்டிகளில் தோல்வி அடைவது என்பது எங்களுக்கு பெரிய பிரச்சனை கிடையாது .

மனதளவு
நாங்கள் மனதளவில் அனைத்திற்கும் தயாராகி இருக்கிறோம். இந்த தோல்விகள் எங்களை வேறு மாதிரி சிந்திக்க வைக்கும். நாங்கள் ஆட்டத்தின் முறையை மாற்ற போவதில்லை. எங்கள் ஆடும் முறையில் எந்த தவறும் இல்லை. சில தவறுகளை மட்டும் சரி செய்ய வேண்டும். அவ்வளவுதான் எங்கள் வேலை.

வீழ்த்த திட்டம்
இந்தியாவை எங்களால் எளிதாக வீழ்த்த முடியும். அவர்கள் எங்களிடம் பலமுறை தோல்வி அடைந்துள்ளனர். இங்கிலாந்து மண்ணில் அவர்களை விட நாங்கள்தான் வலுவான அணி. அதனால் எங்களுக்கு இந்திய வீரர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்று தெரியும்.

பார்ம்
இந்திய வீரர்கள் நல்ல பார்மில் இருக்கிறார்கள். அதனால் நாங்கள் மோத போகும் போட்டி அதிக விறுவிறுப்பாக இருக்கும். நாங்கள் சில சூழ்நிலைகளை எங்களுக்கு தகுந்தபடி மாற்றுவோம். ஆனால் நாங்கள் ஒரு நொடி கூட இந்தியாவிற்கு எதிராக புறமுதுகு காட்ட மாட்டோம். அடுத்த இரண்டு போட்டிகள் எங்களுடையது, நாங்கள்தான் கோப்பையை வெல்வோம், என்று பென் ஸ்டோக்ஸ் குறிப்பிட்டு உள்ளார்.


Click it and Unblock the Notifications