Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - நியூஸி. போட்டி நடக்குமா? நடக்காதா?.. நிலவரம் எப்படி.. லண்டன் வானிலை மையம் என்ன சொல்கிறது?

லண்டன்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் போட்டி நடக்குமா நடக்காதா என்பது குறித்த வானிலை ஆய்வு மைய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

உலகக் கோப்பை தொடரை மழை காலி செய்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். இதுவரை மூன்று போட்டிகள் மழை காரணமாக இந்த உலகக் கோப்பை தொடரில் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

இன்னும் இங்கிலாந்தில் பல இடங்களில் கண்டிப்பாக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வருங்காலத்தில் நிறைய போட்டிகள் மழையால் பாதிக்க வாய்ப்புள்ளது.

 எப்படி பிரச்சனை

எப்படி பிரச்சனை

இங்கிலாந்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகள் எல்லாம் வரிசையாக மழை காரணமாக ரத்தாகி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் மழை காரணமாக ரத்தாகி உள்ளது. மழை காரணமாக இலங்கை வங்கதேசம், இலங்கை பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இந்தப்போட்டிகள் எல்லாமே முக்கியமான போட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 இன்று என்ன

இன்று என்ன

இந்த நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த போட்டி இன்னும் தொடங்கவே இல்லை. மழை காரணமாக இன்னும் அங்கு டாஸ் போடவே தொடங்கவில்லை. இதனால் இந்த போட்டி தொடங்குமா, தொடங்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 என்ன சொன்னார்கள்

என்ன சொன்னார்கள்

முதலில் இந்த போட்டி நடக்க உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானம் இருக்கும் நாட்டிங்ஹாம் பகுதியில் 80% மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கணித்து இருந்தனர். அதன்பின், 80% வாய்ப்பை போக போக குறைத்து 20% மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றார்கள். இதனால் போட்டி தொடங்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. ஆனால் போட்டி தொடங்க சரியாக சில நிமிடங்களுக்கு முன்புதான் மழை பெய்தது.

 தாமதம்

தாமதம்

இதனால் போட்டி தொடங்க சிறிது நேரம் தாமதம் ஆனது. முதலில் 3 மணிக்கு போட்டி குறித்த சோதனை நடக்கும் என்று கூறினார்கள். அதன்பின் 3.30 மணிக்கு போட்டி குறித்த சோதனை நடந்தது. அதன்பின் 4 மணிக்கும் 5 மணிக்கும் போட்டி குறித்த சோதனை நடந்தது. ஆனால் எதிலும் போட்டி நடப்பதற்கான சாதகமான அறிவிப்புகள் வெளியாகவில்லை.

 இப்போது என்ன

இப்போது என்ன

இந்த நிலையில் 6 மணிக்கு மீண்டும் ஆடுகளத்தை சோதனை செய்ய இருக்கிறார்கள். அதே சமயம் இது தொடர்பாக லண்டன் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி போட்டி நடக்க உள்ள நாட்டிங்ஹாம் பகுதியில் இனி மழை பெய்யாது. பெரும்பாலும், இரவு 10 மணி வரை மழை பெய்யாது என்று கூறி உள்ளனர்.

 என்ன நடக்கும்

என்ன நடக்கும்

மழை இனி பெரிதாக இருக்காது. நல்ல வானிலை நிலவும் என்றுள்ளனர். இதனால் 6 மணிக்கு பின் போட்டி துவங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலும் போட்டி துவங்க வாய்ப்பில்லை என்றுதான் கூறுகிறார்கள்.

Story first published: Thursday, June 13, 2019, 18:18 [IST]
Other articles published on Jun 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+