For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் லாரா!

மேற்கு இந்திய தீவுகளின் ஜாம்பவான் வீரர் பிரைன் லாரா நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

Recommended Video

WORLD CUP 2019 | LARA HOSPITALIZED | படப்பிடிப்பின் போது லாராவுக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி-வீடியோ

மும்பை: மேற்கு இந்திய தீவுகளின் ஜாம்பவான் வீரர் பிரைன் லாரா நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

உலகக் கோப்பை போட்டிகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தியாவில் உலகக் கோப்பை போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் நிறுவனம் பெற்று இருக்கிறது.

தினமும் இந்த போட்டிகளை பல லட்சம் பேர் உலகம் முழுக்க பார்த்து வருகிறார்கள். முக்கிய அணிகள் மோதும் போட்டிகளை அதிக பேர் வழக்கத்தை விட பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

லாரா

லாரா

இந்த நிலையில் தற்போது மேற்கு இந்திய தீவுகளின் ஜாம்பவான் வீரர் பிரைன் லாரா இந்தியாவில்தான் இருக்கிறார். இவர் ஸ்டார் நிறுவனத்துடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஒப்பந்தத்தை செய்து இருக்கிறார் . தினமும் நடக்கும் போட்டிகள் குறித்து பேசுவதும், அது குறித்த விவாதங்களை செய்வதையும் இவர் மேற்கொண்டு வருகிறார்.

 முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

இவருடன் இந்திய அணியில் விளையாடிய முன்னணி வீரர்கள் விவாதம் செய்வார்கள். கம்பீர், பதான் போன்ற வீரர்கள் இவருடன் விவாதம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சரியாக ஷூட்டிங் தொடங்கிய நேரத்தில் இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

 மும்பை ஷூட்டிங்

மும்பை ஷூட்டிங்

மும்பையில் உள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலுவலகத்தில் இந்த ஷூட்டிங் நடந்தது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. இதனால் இவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

 என்ன சிகிச்சை

என்ன சிகிச்சை

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் அதிக நேரம் நின்று கொண்டு இருந்ததாலும், சாப்பிட்டு ஏற்பட்ட மாறுதல் காரணமாகவும் இப்படி வலி ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வருகிறது.

Story first published: Tuesday, June 25, 2019, 16:27 [IST]
Other articles published on Jun 25, 2019
English summary
ICC World Cup 2019: West Indies former player Lara admitted in hospital due to chest pain.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+