Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ஒரு பால்தான் முடக்கியது.. தவானுக்கு காயம் ஏற்பட்டது எப்படி.. நைல் ஓவரில் நடந்தது என்ன?

Recommended Video

நைல் ஓவரில் நடந்தது என்ன? தவானுக்கு காயம் ஏற்பட்டது எப்படி

லண்டன்: இந்திய அணியில் இருந்து பாதியில் வெளியேறும் அளவிற்கு தவானுக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்று நிறைய கேள்விகள் எழுந்துள்ளது. அவருக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்ற உண்மை தற்போது வெளியாகி உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் தவான் மூன்று வாரங்களுக்கு நீக்கப்பட்டு இருக்கிறார். இது இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இதனால் அவர் உலகக் கோப்பை தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயமே இதற்கு காரணம் ஆகும்.

என்ன செய்தார்

என்ன செய்தார்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தவான் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடி வந்தார். அப்போது தவான் பிடித்த 14வது ஓவரை கவுல்டர் நைல் வீசினார். மிகவும் ஆக்ரோஷமாக பந்து போடும் அவரின் ஓவர்களை அதற்கு முன் தவான் சரியாக ஆடவில்லை. இதனால் பசியில் இருந்து அவர் வரிசையாக நைல் பந்துகளை பவுண்டரி பறக்கவிட்டார்.

அடித்தார்

அடித்தார்

இந்த ஓவரில் மட்டும் தவான் 4 பவுண்டரிகளை அடித்தார். இதனால் கோபம் அடைந்த நைல் அந்த ஓவரில் பெரிய பவுன்சர் ஒன்றை போட்டார். இந்த பவுன்சர் சரியாக தவானின் இடது கையில் உள்ள கட்டை விரலில் பட்டது. பந்து பட்ட வேகத்தில் பவுண்டரி சென்றது.

பெரிய கோபம்

பெரிய கோபம்

காயம் பட்டவுடன் வேகமாக கிளவுஸை கழற்றி அதை சோதித்து பார்த்தார் தவான். உடனே ஐஸ் கொண்டு வரப்பட்டு அவரின் கை அதில் வைக்கப்பட்டது. இதனால் தவான் கொஞ்ச நேரத்தில் சரி ஆகிவிடுவார் என்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் தவான் வலியை உள்ளுக்குள் மறைத்து வைத்து இருந்தார்.

கஷ்டம்

கஷ்டம்

ஆம் அவரின் விரல் கொஞ்சம் கொஞ்சமாக வீக்கம் அடைய தொடங்கியது. இதனால் பெரிதும் அவர் கஷ்டப்பட்டார். ஆனால் அதை அவர் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. இந்த காயத்துடன் இன்னும் 20 ஓவர்கள் ஆடியவர் பின் செஞ்சுரி அடித்தார். அவர் காயம் பட்ட போது இந்திய அணி 70 ரன்கள்தான் எடுத்து இருந்தது. அதன்பின் 230 ரன்களை இந்திய அணி எடுக்கும் வரை காயத்துடன் தவான் களத்தில் இருந்தார்.

தவான் சூப்பர்

தவான் சூப்பர்

அதன்பின் தவான் 109 பந்தில் 16 பவுண்டரியுடன் மொத்தம் 117 ரன்கள் எடுத்தார். பின் வலி தாங்க முடியாதவர் அதிரடியாக ஆட முயன்று சிக்ஸ் அடிக்க பார்த்தார். ஆனால் கடைசியில் ஸ்டார்க் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இன்று ஸ்கேன்

இன்று ஸ்கேன்

இதையடுத்து இன்று மருத்துவர்கள் அவருக்கு வீக்கம் வடியாமல் இருந்ததால் ஸ்கேன் செய்தனர். அதன் முடிவுகள் தவானுக்கு எதிராக வந்தது. இதனால் அவரை உலகக் கோப்பையில் விளையாட கூடாது என்று அறிவுறுத்தினார்கள்.இதுதான் அவரின் ஓய்விற்கான காரணம் ஆகும்.

Story first published: Tuesday, June 11, 2019, 16:03 [IST]
Other articles published on Jun 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+