Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொப்பையும்.. தோல்வியும் பொருட்டே இல்லை.. இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை.. கற்றுக்கொடுத்த 5 பாடங்கள்!

லண்டன்: இங்கிலாந்து இலங்கை அணிகளுக்கு இடையில் நடந்த போட்டி ஐந்து முக்கியமான விஷயங்கள் கற்றுக்கொடுத்து இருக்கிறது.

நேற்று உலகக் கோப்பை போட்டியில் மிக அதிர்ச்சிகரமான நாள். இங்கிலாந்து இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் நேற்று பல அதிரடி திருப்பங்கள், டிவிஸ்டுகள் நடந்தது.

239 ரன்கள் எடுத்த இலங்கை எளிதாக 219 ரன்களில் இங்கிலாந்தை சுருட்டி சாதனை செய்து இருக்கிறது. இலங்கை கண்டிப்பாக தோல்வி அடையும் என்று நினைத்தவர்களுக்கு அந்நாட்டு அணி பெரிய அதிர்ச்சியை பரிசாக கொடுத்துள்ளது.

கடந்த வரலாறு

கடந்த வரலாறு

இந்த போட்டியில் வெற்றிபெறுவதற்கு முன் வரிசையாக இலங்கை அணி தோல்வியை தழுவி வந்தது. ஒருநாள் அணிகளில் மிக மோசமான அனியாக இலங்கை இருந்தது. உலகக் கோப்பையிலும் மழை, தோல்வி என்று இலங்கை அடி மேல் அடி வாங்கியது. ஆனால் உங்கள் கடந்த வரலாறு நிகழ்காலத்தை பாதிக்கவே கூடாது. அதை சரியாக புரிந்து கொண்ட இலங்கை, இங்கிலாந்து போட்டியில் மட்டும் கவனம் செலுத்தியது.. பழசை எல்லாம் கொஞ்சம் ஓரமாக வைத்தது.. கடைசியில் வெற்றியை ருசித்தது.

தொப்பை என்ன

தொப்பை என்ன

தோல்வி அடையும் சமயங்களில் எல்லாம் உங்களை சுற்றி நிறைய ஏளன பேச்சுக்கள் வரும். அதை எல்லாம் கடந்து வந்தால்தான் வெற்றியை பறிக்க முடியும். அப்படித்தான் நேற்று போட்டிக்கு முன்பாக மலிங்காவின் தொப்பையை இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் செய்தார்கள். malinga belly என்ற டிவிட்டரில் டிரெண்ட் கூட செய்தார். ஆனால் அந்த தொப்பைதான் நேற்று இங்கிலாந்து சிக்ஸ் பேக்கை 'பேக்' செய்து வீட்டிற்கு அனுப்பியது.

தடையே இல்லை

தடையே இல்லை

நம்முடைய இலக்கை அடைய வயது ஒரு தடையே கிடையாது. நேற்று ஆடிய இலங்கை அணியில் 7 வீரர்கள் வரை அனுபவம் இல்லாத மிக மிக இளம் வீரர்கள். மலிங்கா போன்ற சில வீரர்கள் மிகவும் முதிய வீரர்கள். ஆனால் இவர்கள் தங்கள் வயதை ''தள்ளி நில்லுங்க பாஸ்'' என்று சொல்லிவிட்டு, போட்டியில் மட்டும் கவனம் செலுத்தினார்கள். இந்த உலகக் கோப்பை தொடரில் சீனியர் வீரர்களில் ஒருவரான மலிங்காதான் நேற்றைய இலங்கை வெற்றிக்கு முக்கிய காரணம்.

எப்படி வேண்டுமானாலும் மாறும்

எப்படி வேண்டுமானாலும் மாறும்

நேற்று இங்கிலாந்து இலங்கை போட்டியின் தொடக்கத்தில் இங்கிலாந்தின் வெற்றி விகிதம் 75 ஆக இருந்தது. அதன்பின் அது 90 ஆக உயர்ந்தது. இலங்கையில் வெற்றி சதவிகிதம் 10 ஆனது. கடைசியில் இங்கிலாந்து பேட்டிங் செய்ய வந்த போது, இலங்கையின் வெற்றி விகிதம் 4% ஆனது. மலிங்கா எடுத்த முதல் விக்கெட்டிற்கு பின்பும் கூட இது இப்படித்தான் இருந்தது. ஆனாலும் இலங்கை மனம் தளராமல் ஆடி முடிவை மாற்றியது.. ஆம் எந்த ஒரு மோசமான சூழ்நிலையிலும் ஒரு விஷயத்தை இறுதி முடிவை நம்மால் மாற்ற முடியும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

கில்லி எப்படி

கில்லி எப்படி

கதகளி கூட ஆடலாம்.. ஆணவத்துல மட்டுமே ஆட கூடாது என்று கில்லியில் விஜய் தத்துவம் பேசி இருப்பார். இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனும் செய்தியாளர் சந்திப்பில் இலங்கை அணியை கிண்டல் செய்து ஆணவத்தில்தான் ஆடிக்கொண்டு இருந்தார். இலங்கையில் எல்லாம் புதுமுகங்கள் என்று இயான் மோர்கன் கூறி இருந்தார். ஆனால் இலங்கையோ அமைதியாகி ஸ்கெட்ச் போட்டு இங்கிலாந்தை வீழ்த்தி மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்து இருக்கிறது.

Story first published: Saturday, June 22, 2019, 13:19 [IST]
Other articles published on Jun 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+