விதி எண் 19.8ஐ மீறி விட்டீர்கள்.. நியூஸிக்கு எதிராக நேற்று சதி நடந்ததா? அதிர வைக்கும் பின்னணி!
Recommended Video
லண்டன்: நேற்று நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நடுவர்கள் செய்த தவறு ஒன்று இங்கிலாந்து அணிக்கு சாதகமாக முடிந்துள்ளது. முக்கியமான விதி ஒன்றை நடுவர்கள் களத்தில் மீறி இருக்கிறார்கள்.
இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 50 ஓவரில் 241 ரன்கள் எடுத்தது.
இந்த நிலையில் எளிதான இலக்கை நோக்கி இறங்கி 49 ஓவருக்கு 8 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து அணி 227 ரன்கள் எடுத்து இருந்தது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் அடில் ரஷீத் இருவரும் களத்தில் இருந்தனர்.

எப்படி சென்றது
கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இங்கிலாந்து ஆடிக்கொண்டு இருந்தது. அந்த ஓவரை டிரெண்ட் போல்ட் வீசினார். முதல் இரண்டு பந்தில் ரன் எதுவும் செல்லவில்லை. அடுத்த பாலே ஸ்டோக்ஸ் சிக்ஸ் அடித்தார்.

ஆறு ரன்கள்
இந்த போட்டியை மாற்றிய பந்து என்றால் அதற்கு அடுத்த பந்துதான். சரியாக அந்த ஓவரின் 4 வது பந்தில் 2 ரன்கள் எடுக்க, நியூசி வீரர் குப்தில் பந்தை சரியாக தடுத்து தூக்கி கீப்பரிடம் வீசினார். ஆனால் அது பேட்டில் பட்டு ஓவர் த்ரோவாக மாறி பவுண்டரி சென்றது. இதனால் அந்த பந்தில் 6 ரன்கள் தேவையின்றி சென்றது.

எப்படி ஆறு
இந்த நிலையில் எப்படி இதற்கு 6 ரன்கள் வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. பந்து ஓவர் த்ரோ மூலம் பவுண்டரி செல்லவில்லை. ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டுதான் பவுண்டரி சென்று இருக்கிறது. இதற்கு எப்படி பவுண்டரி கொடுத்தார்கள். என்ன கணக்கு இது என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

விதி என்ன
ஆனால் விதிப்படி பேட்டில் பட்டு பவுண்டரி சென்றாலும் அது ஓவர் த்ரோ என்றுதான் கொள்ளப்படும். அதில் எந்த விதமான தவறும் கிடையாது. ஆனால் அந்த பந்தில் எப்படி 6 ரன்களை கொடுத்தார்கள் என்பதுதான் கேள்வியாக உள்ளது. 4 ரன்கள் பவுண்டரி 2 ரன்கள் ஓடிய கணக்கு என்று மொத்தம் 6 ரன்களை கொடுத்துள்ளனர்.

அட
ஆனால் ஐசிசி என 19.8 படி ஓவர் த்ரோ மூலம் பவுண்டரி செல்லும் சமயங்களில் கடைசி ரன் எடுப்பதை கணக்கில் கொள்ள கூடாது. அதாவது ஸ்டோஸ் ஓடிய இரண்டாவது ரன்னை கணக்கில் கொள்ள கூடாது. இதனால் முதல் ரன் மற்றும் பவுண்டரி இரண்டு மட்டும்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும். அதாவது 6 ரன்களுக்கு பதில் 5 ரன்கள் மட்டுமே அளிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

இல்லை
இப்படி சரியாக விதிப்படி 5 ரன்கள் மட்டும் கொடுத்து இருந்தால் இங்கிலாந்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருக்கும். நியூசிலாந்து மகுடம் சூடி இருக்கும். ஆனால் நடுவர்கள் செய்த தவறு போட்டி முடிவை தேவையில்லாமல் மாற்றி உள்ளது.


Click it and Unblock the Notifications