For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது ஒரு மெசேஜ்.. இந்த உலகக் கோப்பை வேறுமாதிரி இருக்கும்.. ரோஹித்தின் பேட்டிங் சொல்வது இதுதான்!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய தொடக்க வீரர் ரோஹித் சர்மா ஆடிய ஆட்டம் அவரின் வாழ்நாளில் மிக முக்கியமான ஒன்று ஆகும்.

லண்டன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய தொடக்க வீரர் ரோஹித் சர்மா ஆடிய ஆட்டம் அவரின் வாழ்நாளில் மிக முக்கியமான ஒன்று ஆகும். இது வெறும் சாதாரணமான ஆட்டம் கிடையாது, இது அவர் எதிரணிக்கு அளித்த மெசேஜ்.

கடந்த புதன்கிழமை இந்தியா தென்னாப்பிரிக்கா போட்டி துவங்கியது.. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா தைரியமாக பேட்டிங் தேர்வு செய்தது. காரணம் பிட்ச் இருந்த நிலை அப்படி. இரண்டாவது இன்னிங்சில் கண்டிப்பாக பிட்ச் மாறும், பால் ஸ்விங் ஆகும். இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள்.

முக்கியமாக பந்து ஸ்விங்கோடு சேர்த்து, பவுன்சும் ஆகும். இதனால் பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ள பயப்படும் ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் எளிதாக அவுட்டாவார்கள் என்று கருதியது. ஆனால் நடந்தது வேறு விஷயம்.

முதலில் பேட்டிங்

முதலில் பேட்டிங்

இந்தியா தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் களமிறங்கியது. இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தொடக்கத்தில் வரிசையாக விக்கெட்டை இழந்தது. இந்திய அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது. முக்கியமாக பும்ரா போட்ட இரண்டு ஸ்விங் பந்துகள், தென்னாப்பிரிக்க ஒப்பனர்களை வீட்டிற்கு அனுப்பியது.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

தென்னாப்பிரிக்காவில் டு பிளசிஸ் மற்றும் கிறிஸ் மோரிஸ் மட்டும் கொஞ்சம் ஆடி அணிக்காக ரன்களை சேர்த்தார்கள். டு பிளசிஸ் 38 ரன்கள் மற்றும் கிறிஸ் மோரிஸ் 42 ரன்கள் எடுத்தனர். கடைசியில் தென்னாபிரிக்கா 227 ரன்கள் எடுத்தது.

எப்படி மேட்ச்

எப்படி மேட்ச்

அதன்பின் இந்திய அணி களமிறங்கியது. வந்த வேகத்தில் தவான் அவுட்டானார். அதற்கும் காரணம் இருந்தது. சாதாரண ஸ்பின் பந்தே 90 கிமீ வேகத்தில் வந்தது. அதோடு ரபாடா போட்ட ஸ்விங் பந்துகள் எப்படி செல்கிறது என்று தெரியாமல் சென்றது. அவரின் வேகத்தில் தவான் கொண்டு வந்த புது பேட் கூட உடைந்து போனது. ஆனால் இது எதையும் தன்னுடைய தலையில் ஏற்றிகொள்ளாமல் பொறுமையாக ஆடினார் ரோஹித் சர்மா.

 வேறு விதமாக ஆடினார்

வேறு விதமாக ஆடினார்

எப்போது ரோஹித் எத்தனை ரன்கள் தேவைப்பட்டாலும் அதை கருத்தில் கொள்ளாமல் அதிரடியாக ஆடுவார். ஆனால் சென்ற போட்டியில் அவர் அப்படி ஆடவில்லை. ஏனென்றால் இது உலகக் கோப்பை. அதனால் அவர் மிகவும் நிதானமாக ஆடினார். சிக்ஸர்களை விட சிங்கிள் அதிகம் எடுத்தார். தன்னுடைய ஈகோவை ஓரம்கட்டிவிட்டு மிகவும் நிதானமாக ஆடினார்.

ரொம்ப திணறல்

ரொம்ப திணறல்

ஆனால் 200 ரன்னை எடுக்கவே இந்திய அணி மோசமாக திணறியது. தென்னாப்பிரிக்கா அணியை இந்திய அணி 200 ரன்களுக்குள் சுருட்டும் என்று என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோலியும் வந்த வேகத்தில் அவுட்டாகி வெளியே போனார். அதேபோல் கே எல் ராகுல் களத்தில் இருந்தாலும் பெரிதாக அதிரடி காட்டவில்லை. இதனால் மொத்த பொறுப்பும் ரோஹித் தலையில் விழுந்தது.

நிறைய மாற்றம்

நிறைய மாற்றம்

அதன்பின்தான் ரோஹித்தின் போட்டியில் நிறைய மாற்றம் ஏற்பட்டது. மிகவும் நிதானமாக ஆடினார். தேவையில்லாத பந்துகளை விட்டார். அன்று ஆடிய ரோஹித்திடம் ரோஹித்தை விட தோனிதான் அதிகம் இருந்தார். அணியின் வெற்றிகாக எந்த தூரத்திற்கும் செல்ல ரோஹித் தயாராகி இருந்தார். அவர் எதிர்கொண்ட ஒவ்வோர் பந்திலும், அவரின் பொறுமையிலும் அது அப்படியே வெளிப்பட்டது.

எப்படி வெற்றி

எப்படி வெற்றி

அதன்பின் இறங்கிய தோனியும் சொற்ப ரன்களில் அவுட்டானார். ரோஹித் சர்மா மட்டுமே 122 ரன்கள் அடித்தார். தவான், கோலி, கே எல் ராகுல் என்று எல்லோரும் ஏமாற்றம் அளித்தார்கள். இந்திய அணியின் வெற்றிக்கு ரோஹித் சர்மா முக்கிய காரணமாக இருந்தார். இதனால் ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மெசேஜ் அனுப்பி உள்ளார்

மெசேஜ் அனுப்பி உள்ளார்

உலகக் கோப்பையில் உடன் விளையாடும் அணிகளுக்கு எல்லாம் ரோஹித் ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கிறார். இந்த ரோஹித் 4 வருடம் முன் ஸ்டெயின் போட்ட பவுன்சர் பந்தில் திணறிய பழைய ரோஹித் அல்ல.. இவர் 4 கோப்பைகளை மும்பை இந்தியன் அணிக்கு வாங்கி கொடுத்த ரோஹித் என்பதை நிரூபித்துள்ளார்.... இவர் கோலி அன்கோவுடன் சேர்த்து இந்திய அணிக்கும் கப் வாங்கி கொடுப்பார்.

Story first published: Friday, June 7, 2019, 17:45 [IST]
Other articles published on Jun 7, 2019
English summary
ICC World Cup 2019: What is so special with Rohit Sharma's batting against South Africa?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+