இது போதுமே.. இந்திய அணியை சந்தோசத்தில் ஆழ்த்திய சூப்பர் செய்தி.. வீரர்கள் மகிழ்ச்சி.. ஏன் தெரியுமா?
லண்டன்: இந்திய அணிக்கு உலகக் கோப்பை தொடரில் முக்கியமான நல்ல செய்தி ஒன்று கிடைத்து இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கான நல்ல வாய்ப்பு ஒன்று கோலி படைக்கு கிடைத்துள்ளது.
உலகக் கோப்பை தொடங்கிய போது 4 அணிகள் செமி பைனலுக்கு செல்லும் என்று கணிப்புகள் வெளியானது. அதில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடம்பெற்று இருந்தது. இந்தியாவிற்கு கோப்பையை வெல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டு இருந்தது.
தற்போது அந்த கணிப்பு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறி வருகிறது. ஆம் இந்திய அணி கோப்பை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அதற்கு ஏற்ற நல்ல சூழ்நிலையும் தற்போது இந்திய அணிக்கு கை கூடி வந்துள்ளது.

செமி பைனல்
தற்போது செமி பைனலுக்கு நான்கு அணிகள் தேர்வாகி இருக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா , இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் தேர்வாகி உள்ளது. இதில் புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்தது. புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா இரண்டு, இங்கிலாந்து மூன்று, நியூசிலாந்து நான்காம் இடத்தில் உள்ளது.

என்ன ரூல்ஸ்
இந்த நிலையில் புள்ளி பட்டியலில் முதலில் இருக்கும் இந்தியா கடைசியில் இருக்கும் நியூசிலாந்தை செமி பைனலில் சந்திக்க வேண்டும். இரண்டு அணிகளுக்கும் இடையில் செமி பைனல் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் வரும் செவ்வாய் கிழமை நடக்க உள்ளது.

என்ன நல்லது
நேற்று போட்டியில் இந்திய வெற்றிபெற்றது. இலங்கைக்கு எதிராக இந்தியா அதிரடியாக வென்றது. அதேபோல் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா இடையில் நடந்த லீக் போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது. இதனால் புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடம் சென்றது. இதுவே தற்போது இந்திய அணிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

ஏன் சாதகம்
இந்திய அணி செமி பைனலில் இங்கிலாந்து அணியுடன் மோதினால் வெற்றிவாய்ப்பு குறைவு. ஆனால் நியூசிலாந்து அப்படி அல்ல. இந்த வருட தொடக்கத்தில்தான் நியூசிலாந்து மண்ணில் இதே அணியை எதிர்த்து இந்தியா ஒருநாள் தொடரை அதிரடியாக வென்றது. இதனால் இந்தியா எளிதாக செமி பைனலில் நியூசிலாந்தை வென்று பைனல் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேறு யார்
இதனால் நியூசிலாந்தை எதிர்கொள்ள போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் வியாழக்கிழமை இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் செமி பைனல் போட்டி நடக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி, ஞாயிற்றுக் கிழமை இந்தியாவை பைனலின் போது சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications