Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் ரசிகர்களே ஒரு குட் நியூஸ்.. ஒரு சின்ன பேட் நியூஸ்.. இந்தியா - பாக். போட்டி நடக்குமா?

லண்டன்: இங்கிலாந்தில் நிலவும் வானிலை காரணமாக இன்று இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்குமா நடக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த வானிலை மைய அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் பரபரப்பான உலகக் கோப்பை லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தியா பாகிஸ்தான் மட்டுமில்லாமல் பல்வேறு உலக நாடுகள் இன்று நடக்கும் போட்டியை கவனமாக பார்த்துக் கொண்டு இருக்கிறது.

ஆனால் இந்த மிக முக்கியமான போட்டி மழையால் தடைபட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது .

 நேற்று எப்படி

நேற்று எப்படி

நேற்று இரவு போட்டி நடக்க இருந்த மான்செஸ்டர் மைதானத்தில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. நேற்று இரவு முழுக்கவே அங்கு மழை பெய்தது. இதனால் இன்று போட்டி நடக்குமா என்ற சந்தேகம் நிலவியது. முக்கியமாக இன்று அதிகாலையும் மழை பெய்ததால் போட்டி நடக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.

 என்ன கணிப்பு

என்ன கணிப்பு

முதலில் இந்த மான்செஸ்டரில் 95% மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. இதனால் கண்டிப்பாக போட்டி நடக்காது என்றுதான் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்தார்கள். ஆனால் தற்போது மழைக்கான வாய்ப்பு 50%மாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இது கிரிக்கெட் ரசிகர்கள் இடையில் சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது.

 எப்படி இருக்கிறது

எப்படி இருக்கிறது

இன்று காலை சிறிய தூறல் மழைக்கு பின் மான்செஸ்டரில் மழையே பெய்யவில்லை. இதனால் மைதானம் கொஞ்சம் கொஞ்சமாக காய்ந்தது. இந்த நிலையில் தற்போது மைதானம் நன்றாக உலர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. மைதானம் மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும். விளையாட ஏற்ற நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 சரியாக தொடங்கும்

சரியாக தொடங்கும்

இதில் நல்ல செய்தி என்னவென்றால் மழை இல்லாத காரணத்தால் போட்டி சரியாக மூன்று மணிக்கு தொடங்கும் என்கிறார்கள். அதேபோல் 2.30 மணிக்கு சரியாக டாஸ் போட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

 ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இதில் கெட்ட செய்தி என்னவென்றால், போட்டி தொடங்கிய பின் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடக்கும் பட்சத்தில், போட்டி பாதியில் நிற்கும். அல்லது போட்டி சரியாக தொடங்கிய சில நிமிடத்தில் மழை பெய்யலாம் என்று கூறுகிறார்கள். இதனால் இன்றைய போட்டி எப்படியாவது மழையால் இடையில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Sunday, June 16, 2019, 14:35 [IST]
Other articles published on Jun 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+