Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதை மட்டும் இன்று சரியாக செய்தால்.. இந்தியா பைனல் செல்லும்.. கோலி முன் இருக்கும் அந்த ஒரு சவால்!

Recommended Video

ICC World Cup 2019: இதை மட்டும் இன்று சரியாக செய்தால்.. இந்தியா பைனல் செல்லும்- வீடியோ

லண்டன்: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் போட்டியில் மான்செஸ்டர் மைதானம் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பை செமி பைனல் போட்டிகள் இன்று தொடங்க உள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று செமி பைனல் போட்டிகள் நடக்க உள்ளது.

நாளை மறுநாள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் செமி பைனல் போட்டிகள் நடக்கிறது. இன்று இந்தியா வெற்றிபெறும் பட்சத்தில் இறுதிப் போட்டிக்கு தேர்வாகும்.

எங்கு நடக்கிறது

எங்கு நடக்கிறது

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரபோர்ட் மைதானத்தில் நடக்கிறது. இந்த பிட்ச், இன்றைய போட்டியில் பெரிய ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு எப்படி பந்து போட்டாலும் பெரிய அளவில் ஸ்விங் செய்ய முடியாது.

என்ன சவால்

என்ன சவால்

இது பவுலர்களுக்கு மிகவும் சவாலான பிட்ச் ஆகும். இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணி கண்டிப்பாக 280+ ரன்களை எளிதாக எடுக்க முடியும். நல்ல பேட்டிங் ஆர்டர் இருந்தால் 300+ ரன்களை கூட எடுக்க முடியும். ஆனால் இரண்டாவது களமிறங்கும் அணி 250+ ரன்களை எடுப்பதே கடினம். இங்குதான் மேற்கு இந்திய தீவுகளை இந்தியா 200 ரன்கள் கூட எடுக்க விடமால் சுருட்டியது.

எப்படி

எப்படி

அதேபோல் இங்குதான் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 300+ ரன்களை எடுத்தது. இதனால் இங்கு இந்தியா டாஸ் வென்றால் கண்டிப்பாக வெற்றிபெற வாய்ப்புள்ளது. இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் அதிக இலக்குகளை எடுத்து எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க முடியும்.

 ஏன் அப்படி

ஏன் அப்படி

இதனால் இன்று கோலி முதலில் பேட்டிங் செய்யவே அதிகம் விரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு இரண்டாவது பேட்டிங் களமிறங்குவது பெரிய கஷ்டமானது. இங்கு பிட்ச் போக போக பவுலிங் பிட்சாக மாறும். பந்து அதிகமாக பவுன்சாகும். இந்த சூழ்நிலைகளை சரியாக பயன்படுத்தி விளையாடினால் கண்டிப்பாக இந்தியா பைனல் செல்லும். இதனால் இந்திய அணி ஸ்விங் பந்துகளை நம்பாமல் யார்க்கர், ஸ்லோ பால், பவுன்சர் என்று விளையாடினால் கண்டிப்பாக வெற்றியை ருசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 9, 2019, 9:25 [IST]
Other articles published on Jul 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+