Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி சொன்ன அந்த வார்த்தைகள்.. மனதை மாற்றிய டி வில்லியர்ஸ்.. பின்னணியில் நடந்தது இதுதான்!

லண்டன்: அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் தென்னாப்பிரிக்கா ஒருநாள் அணிக்கு திரும்பி வர முடிவு செய்ததற்கு பின் முக்கிய காரணம் ஒன்று இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மிஸ்டர் 360 என்று அழைக்கப்படும் வீரர்தான் டி வில்லியர்ஸ். இவர் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் தென்னாப்பிரிக்கா அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இனி தென்னாப்பிரிக்கா அணிக்காக கிரிக்கெட் விளையாட போவதில்லை என்றும் அவர் கூறினார். அவரின் இந்த முடிவு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

அவர் ஓய்வு பெறும் போது வெளியிட்ட கடிதத்தில், நான் தென்னாப்பிரிக்கா அணிக்காக நிறைய விளையாடிவிட்டேன். இனி இதேபோல் விளையாட முடியுமா என்று தெரியவில்லை. நான் இப்போது நல்ல பார்மில் இருக்கிறேன். இதே பார்மோடு போட்டியில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன்.

தீர்ந்துவிட்டது

தீர்ந்துவிட்டது

என்னிடம் அணிக்காக விளையாட இனியும் சக்தி இருப்பதாக தெரியவில்லை. அணியில் நான் தொடர்வது இனியும் சரியாக இருக்காது. நான் இளைஞர்களுக்கு வழிவிடவே விரும்புகிறேன். அதனால் மொத்தமாக அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற முடிவெடுத்துள்ளேன், என்று குறிப்பிட்டு இருந்தார்.

பெரிய அதிர்ச்சி

பெரிய அதிர்ச்சி

டி வில்லியர்ஸ் எடுத்த இந்த முடிவு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. முக்கியமாக தென்னாப்பிரிக்கா ரசிகர்கள், உலகக் கோப்பை தொடரை வைத்துக் கொண்டு டி வில்லியர்ஸ் இப்படி செய்வது சரியா என்று கேள்வி எழுப்பினார்கள். அந்த அணி நிர்வாகத்தையும் இது கோபத்திற்கு உள்ளாக்கியது.

என்ன செய்தார்

என்ன செய்தார்

ஆனால் டி வில்லியர்ஸ் தொடர்ந்து ஐபிஎல் போன்ற கிளப் போட்டிகளில், லீக் போட்டிகளில் ஆடி வந்தார். அதில் அவர் எப்போதும் போல முழு பார்மில் சிறப்பாகவே ஆடி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்தார். இவர் கோலிக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ன அறிவுரை

என்ன அறிவுரை

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியின் போது கோலி டி வில்லியர்ஸுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கி இருக்கிறார். அதன்படி, நீங்கள் நல்ல பார்மில் இருக்கிறீர்கள். நீங்கள் இல்லாமல் தென்னாப்பிரிக்கா அணி பெரிய அளவில் சிரமத்திற்கு உள்ளாகிறது. அதனால் மீண்டும் அணிக்கும் செல்வது குறித்து பரிசீலனை செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

முடிவு எடுத்தார்

முடிவு எடுத்தார்

அதேபோல் ஐபிஎல் போட்டியின் போது பல நாட்டு வீரர்கள் இதேபோல் டி வில்லியர்ஸிடம் கூறி இருக்கிறார்கள். இதையடுத்தே டி வில்லியர்ஸ் மீண்டும் அணிக்கு திரும்ப முடிவு எடுத்தார். ஆனால் அவரின் கோரிக்கையை அந்நாட்டு அணி நிர்வாகம் மறுத்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, June 7, 2019, 14:13 [IST]
Other articles published on Jun 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+