Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவ்வளவு ரன்களா? செம.. இந்தியா எத்தனை ரன்கள் அடித்தால் வெற்றி.. ஆச்சர்யம் அளித்த டிஎல்எஸ்!

லண்டன்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தற்போது டிஎல்எஸ் கருத்து கணிப்புகள் கிரிக்கெட் வல்லுநர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது செமி பைனல் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெற்று பைனலுக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் ஆடி வருகிறது.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடக்கும் போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களால் இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியவில்லை. முக்கியமாக பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோரின் பவுலிங்கை சுத்தமாக நியூசிலாந்து வீரர்களால் சமாளிக்க முடியவில்லை. இது அந்த அணிக்கு பெரிய பிரச்சனையாக முடிந்தது. இடையில் 10 ஓவர்கள் அந்த அணியால் பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை.

செம பவுலிங்

செம பவுலிங்

இதனால் 46.1 ஓவர்கள் பிடித்த அந்த அணி 5 விக்கெட்டை இழந்து வெறும் 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது அந்த அணியினருக்கு பெரிய பிரச்சனையாக முடிந்தது. இந்த நிலையில் ஆட்டம் நடந்து கொண்டு இருக்கும் போதே அங்கு மழை பெய்தது. மழையால் தற்போது போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

இந்த போட்டியில் இனியும் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்யவில்லை என்றால் இந்திய அணிக்கு ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. மழை தொடர்ந்தால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி முடிவுகள் எடுக்கப்படும். டக் வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும்.

என்ன இலக்கு

என்ன இலக்கு

அப்படி நடந்தால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி

  • 46 ஓவரில் இந்திய அணி 237 ரன்கள் எடுக்க வேண்டும்.
  • 35 ஓவரில் இந்திய அணி 209 ரன்கள் எடுக்க வேண்டும்.
  • 30 ஓவரில் இந்திய அணி 192 ரன்கள் எடுக்க வேண்டும்.
  • 25 ஓவரில் இந்திய அணி 172 ரன்கள் எடுக்க வேண்டும்.
  • 20ஓவரில் இந்திய அணி 148 ரன்கள் எடுக்க வேண்டும்.
  • பல்வேறு வாய்ப்பு

    பல்வேறு வாய்ப்பு

    இதனால் இந்திய அணிக்கு இந்த போட்டியில் அதிக வெற்றிவாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா இதனால் பெரும்பாலும் பைனல் செல்ல வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

Story first published: Tuesday, July 9, 2019, 19:12 [IST]
Other articles published on Jul 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+