Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

8 நிமிடத்தில் நடந்த மாற்றம்.. உச்சகட்ட பரபரப்பில் இந்தியா- பாக் போட்டி..யாருக்கு சாதகமாக செல்கிறது?

Recommended Video

WORLD CUP 2019 IND VS PAK | RAIN STOPPED PLAY | 46.4வது ஓவரில் மழையால் ஆட்டம் நிறுத்தம்

லண்டன்: இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் ,இந்த போட்டியில் பெரும்பாலும் டிஎல்எஸ் முறை பயன்படுத்தப்பட வாய்ப்பு இருந்தது. அப்படி நடக்கும் பட்சத்தில் இந்த போட்டி தற்போது மீண்டும் தொடங்கி இருப்பது யாருக்கு சாதகமாக மாறும் என்று விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

தற்போது இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டம் மான்செஸ்டர் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி தற்போது பவுலிங் தேர்வு செய்து இருக்கிறது.

கே எல் ராகுல் இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கினார். அவர் 78 பந்துகளில் பொறுமையாக 57 ரன்கள் அடித்தார்.அதே போல் ரோஹித் சர்மா மொத்தம் 113 பந்துகளில் 140 ரன்கள் அடித்தார். இதில் 14 பவுண்டரி 3 சிக்ஸர் அடக்கம்.

எப்படி ரன்கள்

எப்படி ரன்கள்

அதன்பின் கோலி இந்திய அணி சார்பாக அதிரடியாக ஆடி வந்தார். இவர் 62 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரி அடக்கம். இவர் செஞ்சுரி அடிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆனால் போட்டியில் மழை குறுக்கிட்டது.

என்ன ரன்கள்

என்ன ரன்கள்

அதன்படி 46.4 ஓவர் இருக்கும் போது இந்தியா 4 விக்கெட்டிற்கு 305 ரன்களுடன் விளையாடி வந்தது. விஜய் சங்கர் ஒரு பக்கம் திணறிக் கொண்டு இருந்தார். அவரை திணறிய நேரத்தில் சரியாக மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி தடைபட்டது. போட்டி அதனுடன் நிறுத்தப்பட்டது .

எத்தனை அடிக்க வேண்டும்

எத்தனை அடிக்க வேண்டும்

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் ,இந்த போட்டியில் பெரும்பாலும் டிஎல்எஸ் முறை பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டால் பாகிஸ்தான் அணி 327 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

அதே சமயம் போட்டி 40 ஓவராக குறைக்கப்பட்டால் 298 ரன்கள் எடுக்க வேண்டும். ஆனால் போட்டி அதிக நேரம் பாதித்து மழை பெய்து 20 ஓவராக குறைக்கப்பட்டால் பாகிஸ்தான் 183 ரன்கள் எடுத்தால் போதும். இதனால் போட்டி எவ்வளவு நேரம் பாதிக்கிறதோ அவ்வளவு நன்மைகள் பாகிஸ்தானுக்கு ஏற்படும். போட்டி சீக்கிரம் தொடங்கினால் இந்திய அணிக்கு நன்மை.

அதேபோல் தொடங்கியது

அதேபோல் தொடங்கியது

அதேபோல் தற்போது இந்த போட்டி விரைவில் தொடங்கி இருக்கிறது. இதில் 35 நிமிடங்கள் போட்டி தடைபட்டது. அதேபோல் 8 நிமிட ஆய்விற்கு பின் போட்டி தொடங்கியது. இந்த நிலையில் போட்டியில் ஒரு ஓவர் கூட குறைக்கப்படவில்லை. இதனால் தற்போது போட்டி தொடர்ந்து இந்திய அணிக்கு சாதகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 16, 2019, 19:22 [IST]
Other articles published on Jun 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+