Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஒரு மழை.. எல்லாம் போச்சு.. பெரும் பின்னடைவை சந்தித்த இந்திய அணி.. என்ன நடந்தது?

Recommended Video

WORLD CUP 2019 ENG VS WI | பெரும் பின்னடைவை சந்தித்த இந்திய அணி! என்ன நடந்தது?

லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டி மழையால் ரத்தானதால் இந்திய அணி பெரிய பின்னடைவை சந்தித்து இருக்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தற்போது மழை பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. தொடர்ந்து இந்த தொடரில் மழை பெய்து வருவதால், முக்கியமான போட்டிகள் எல்லாம் தடை பட்டு வருகிறது.

இதுவரை 4 போட்டிகள் இந்த தொடரில் இந்த மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்த தொடரில் இன்னும் போட்டிகள் சில மழை காரணமாக ரத்தாக வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

மழை

மழை

இங்கிலாந்தில் தற்போது மழைக்காலம். இது தெரியாமல் ஐசிசி தனது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இங்கிலாந்தில் நடத்த முடிவு செய்து இருக்கிறது. எதிர்பார்த்தது போலவே தொடர் மழை தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு இடைஞ்சலாக மாறி இருக்கிறது. வரிசையாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

நான்காவது போட்டி

நான்காவது போட்டி

ஏற்கனவே மழை காரணமாக இலங்கை வங்கதேசம், இலங்கை பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக நேற்று நியூசிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான போட்டிகள் ரத்து செய்யப்பட்டது . இதனால் மொத்தம் 4 போட்டிகள் இந்த தொடரில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

என்ன முக்கியம்

என்ன முக்கியம்

நேற்று இந்தியா நியூசிலாந்து போட்டி நடக்கும் என்று இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வந்தார்கள். நேற்று மட்டும் இந்த போட்டி நடந்து இருந்தால் இந்திய அணி கண்டிப்பாக வெற்றிபெற்று இருக்கும். ஆம், இந்த போட்டியில் இந்திய அணிய வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் நேற்று பிரகாசமாக இருந்தது. போட்டி மட்டும் நடந்து இருந்தால் கண்டிப்பாக இந்தியா வென்று இருக்கும்.

ஆனால்

ஆனால்

ஆனால் நேற்று திட்டமிட்டபடி போட்டி நடக்கவில்லை . நேற்று இந்திய அணி போட்டியில் வென்று இருந்தால் 2 புள்ளிகளை பெற்று இருக்கும். இதனால் புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதல் இடம் பெற்று இருக்க முடியும். ஆனால் மழை காரணமாக போட்டி ரத்தனத்தால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி நேற்று வழங்கப்பட்டது . இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடம் வகிக்கிறது.

என்ன மோசம்

என்ன மோசம்

இதனால் இந்திய அணி இந்த தொடரில் ஆரம்பத்திலேயே முதல் இடம் பிடிக்க முடியாமல் போய் உள்ளது . ஒரு போட்டியில் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலியா கூட நம்மை விட ஒரு இடம் மேலே இருக்கிறது. இதனால் இனி வரும் போட்டிகளில் இந்தியா அதிரடியாக ஆடி வெற்றிபெற்று முதலிடம் பிடிக்க வேண்டும் என்பது அவசியம் ஆகிறது.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

ஏனென்றால் இந்த தொடரில் செமி பைனலுக்கு நான்கு அணிகள் தேர்வாகும். ஆனால் பட்டியலில் 4 வது இடத்தில் இருக்கும் அணிதான் தேர்வாகும் என்று கூற முடியாது. ஏனென்றால் புள்ளிகள் கணக்கு எப்படி முக்கியமோ, அதேபோல் ரன் ரெட் கணக்கும் மிக முக்கியம். தற்போது ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி நான்காம் இடம் வகிக்கிறது. இதனால் இந்திய அணி வரும் போட்டிகளில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, June 14, 2019, 10:13 [IST]
Other articles published on Jun 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+