Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இரண்டில் என்ன நடந்தாலும் பிரச்சனைதான்.. கோலிக்கு காத்திருக்கும் பெரிய சவால்.. எப்படி எதிர்கொள்வார்!

லண்டன்: இந்திய அணிக்கு செமி பைனல் போட்டிகளில் இருந்து நிறைய சவாலான விஷயங்கள் காத்து இருக்கிறது. கோலி இதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பொறுத்தே இந்திய அணியின் வெற்றியும் இருக்கிறது.

இந்தியா தற்போது செமி பைனலுக்குள் நுழைந்து உள்ளது. இந்த தொடர் முழுக்க இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது.

இங்கிலாந்து அணியிடம் மட்டுமே இந்தியா தோல்வியை தழுவியது. 9 போட்டிங்களில் 7 போட்டியில் வெற்றிபெற்று இந்தியா 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்திய அணிக்கு இனிதான் பிரச்சனையே இருக்கிறது. ஏனென்றால் இந்திய அணி இரண்டு முக்கியமான பிரச்சனைகளை அடுத்தடுத்த போட்டிகளில் சந்திக்க உள்ளது. முதல் பிரச்சனை செமி பைனல் போட்டிகள். இந்திய அணி செமி பைனலில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியாக வேண்டும்.

வலுவான அணி

வலுவான அணி

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா இதுவரை எதிர்கொள்ளாத அணி என்றால் அது நியூசிலாந்து அணிதான். இரண்டு அணியின் பேட்டிங்கும் எப்போது சொதப்பும் என்று தெரியாது. ஆனால் இந்தியாவிற்கு சமமான பவுலிங் பலத்தை நியூசிலாந்து கொண்டு இருக்கிறது. அதிலும் நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை நெம்பி எடுப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

இந்தியா இந்த உலகக் கோப்பை தொடரில் சிறிய அணிகளை எல்லாம் எளிதாக வீழ்த்திவிட்டது என்று சொல்ல முடியாது. ஆப்கானிஸ்தான், மேற்கு இந்திய தீவுகளிடம் கூட இந்தியா மோசமாக திணறித்தான் வென்றது. வலுவான இங்கிலாந்து அணியிடம் இந்தியா மோசமாக தோல்வி அடைந்தது. இந்தியாவின் வெற்றிகளில் பாராட்டத்தக்கது என்றால் அது ஆஸ்திரேலியாவிற்கு எதிரானது மட்டும்தான்.

சவால்

சவால்

இதனால் இந்தியா நியூசிலாந்து அணியை மிகவும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். ஆனால் இந்தியா அணி நியூசிலாந்தை வீழ்த்தினாலும் கூட சில சிக்கல்கள் இருக்கிறது. இந்தியா நியூசிலாந்தை வீழ்த்திய பின் கண்டிப்பாக ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்தைதான் செமி பைனலில் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

கோலி என்ன செய்வார்

கோலி என்ன செய்வார்

இங்கிலாந்து அணியிடம் இந்தியா ஏற்கனவே மோசமாக தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவிடம் இந்தியா வெற்றிபெற்று இருந்தாலும், கடந்த ஆஸ்திரேலியா போட்டியில் ஆடிய தவான் இப்போது அணியில் இல்லை. இதனால் இரண்டில் எந்த அணியை பைனலில் இந்தியா எதிர்கொண்டாலும் கோலிக்கு அது பெரிய சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Story first published: Sunday, July 7, 2019, 14:34 [IST]
Other articles published on Jul 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+