நீண்ட நேரம் என்ன செய்தார்.. பேட்டிங் செய்யும் போதே காணாமல் போன கோலி.. ஒரே பரபரப்பு.. எங்கே சென்றார்?
Recommended Video
லண்டன்: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்யும் போதே கோலி பாதியில் காணாமல் போனது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகக் கோப்பை லீக் ஆட்டம் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையில் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி நேற்று அதிரடியாக வென்றது.
நேற்று 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 268 ரன்கள் எடுத்தது. கோலி 72, பாண்டியா 46, தோனி 56 ரன்கள் எடுத்தனர். மேற்கு இந்திய தீவுகள் 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கோலி 72 ரன்கள் எடுத்தார்.

சென்றார்
இந்த நிலையில் இந்த போட்டியின் போது பேட்டிங் செய்யும் போதே கோலி பாதியில் கள நடுவரிடம் உள்ளே செல்வதற்கு அனுமதி கேட்டார். பெவிலியன் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டார். கள நடுவர் அவரிடம் நீண்ட நேரம் காரணங்களை கேட்டு விசாரித்தார். அதன்பின் உள்ளே செல்ல அனுமதித்தார்.

எங்கே போனார்
ஆனால் உள்ளே சென்ற கோலி நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. சுமார் 8 நிமிடங்களுக்கு மேலாக அவர் உள்ளே சென்று இருந்தார். ஆனால் அவர் எங்கே சென்றார். என்ன செய்தார் என்ற விவரங்கள் கமெண்ட்ரியில் சொல்லப்படவில்லை. இதனால் அந்த நேரத்தில் இந்திய அணி டிரிங்ஸ் பிரேக் எடுத்தது.

என்ன குழப்பம்
இவர் பெரும்பாலும் பாத்ரூம் சென்று இருப்பார் என்று கூறப்படுகிறது. கோலி களத்தில் இருந்து முதலில் பாதியில் வெளியேறியதை வைத்து அவர் ரிட்டயர்ஹர்ட் ஆகிறாரா என்று பலர் கேட்டு இருந்தனர். ஆனால் அவர் மீண்டும் களத்திற்கு வந்தார்.

காத்திருப்பு
இந்த சம்பவம் மைதானத்தில் சில நிமிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு இந்திய தீவுகள் வீரர்கள் எல்லோரும் கோலி மீண்டும் உள்ளே வர வேண்டும் என்று காத்து இருந்தனர். தற்போது இதை வைத்து பலர் மீம்ஸ் போடதுவங்கி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications