Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியை காணோம்.. எங்கே போனார்.. மாலை முழுக்க தேடிய இந்திய அணியினர்.. என்ன நடந்தது தெரியுமா?

Recommended Video

WORLD CUP 2019 IND VS NZ DHONI SLEEPS | தோனி தூங்கும் வைரல் புகைப்படம்

லண்டன்: நேற்று இந்திய அணியின் முன்னணி வீரர் தோனியை காணவில்லை என்று வீரர்கள் பலர் மாலையில் தேடி இருக்கிறார்கள்.

நேற்று உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்னொரு சோகமான நாள் என்றுதான் கூற வேண்டும். ஆம் இந்திய ரசிகர்கள் மட்டுமில்லாமல் கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோரும் ஆர்வமுடன் எதிர்பார்த்த மிக முக்கியமான கிரிக்கெட் போட்டி நேற்று ரத்து செய்யப்பட்டது.

நேற்று இந்திய அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையில் கிரிக்கெட் போட்டி நடப்பதாக இருந்தது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிரமாக தயாராகி வந்தார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் நேற்று போட்டி தொடங்குமா என்பதே பெரிய சந்தேகமாக இருந்தது. போட்டி தொடங்கும் முன் வரை மேட்ச் நடக்க இருந்த டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. ஆனால் நேரம் செல்ல செல்ல மழை அதிகம் ஆனது. சரியாக டாஸ் போட வேண்டிய நேரத்தில் மழை பெய்தது.

என்ன ஆனது

என்ன ஆனது

இதனால் டாஸ் போடுவது தள்ளி போடப்பட்டது. முதலில் ஒரு மணி நேரத்திற்கு பின் போட்டி தொடங்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் நேரம் செல்ல செல்ல போட்டி தொடங்குவது சந்தேகம்தான் என்று குறிப்பிட்டார்கள். நேற்று 7 மணி வரை டாஸ் போடப்படவே இல்லை. இதனால் போட்டி கைவிடப்படுவது உறுதியானது.

நடக்கவில்லை

நடக்கவில்லை

இதையடுத்து ரசிகர்கள் எல்லோரும் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள். சரியாக 7.30 மணிக்கு போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது இந்திய ரசிகர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்து இருக்கிறது. இந்த நிலையில் நேற்று இந்த பிரச்சனைகளுக்கு இடையில் இந்திய அணியில் வேறு ஒரு கலகலப்பான சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

என்ன சம்பவம்

என்ன சம்பவம்

நேற்று மாலை மழை பெய்த போது எல்லா வீரர்களும் பெவிலியனில் அமர்ந்து மைதானத்தை பார்த்துக் கொண்டு இருந்தனர். இந்த புகைப்படங்கள் வெளியானது. ஆனால் தோனி மட்டும் பெவிலியனில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஹர்திக் பாண்டியாவும் பெவிலியனில் காணப்படவில்லை. இதனால் இவர்கள் இருவரையும் வீரர்கள் தேடிக்கொண்டு இருந்தனர்.

நடந்தது என்ன

நடந்தது என்ன

கடைசியில் தோனியை வீரர்கள் எல்லோரும் 6 மணி அளவில் கண்டுபிடித்து இருக்கிறார்கள். தோனி தனது அறையில் படுத்து தூங்கி கொண்டு இருந்துள்ளார். போட்டி எப்படியும் கைவிடப்படும் என்பது தெரிந்து அவர், தனது அறையில் உறங்கி கொண்டு இருந்தார். நேற்று மதியம் மட்டும் இவர் மைதானத்திற்கு வந்தார். அதன்பின் மாலை முழுக்க இவரை ரசிகர்களால் பார்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, June 14, 2019, 10:45 [IST]
Other articles published on Jun 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+