Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. இந்திய அணிக்கு செமி பைனலில் காத்திருக்கும் ஷாக்கிங் செய்தி!

Recommended Video

WORLD CUP 2019 | அரையிறுதிக்கு சென்றால் என்ன? இந்திய அணிக்கு காத்திருக்கும் பெரிய சவால்

லண்டன்: இந்திய அணி செமி பைனலுக்குள் நுழைந்து உள்ள நிலையில் தற்போது செமி பைனலில் இந்தியா யாருடன் மோத போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் சரியாக 10 நாட்களில் யார் சாம்பியன் என்று தெரிந்துவிடும்.

இதனால் இனி நடக்கும் போட்டிகள் அதிக முக்கியத்துவம் பெறும். அதே சமயம் முக்கியமான லீக் ஆட்டம் ஒன்றும் இந்திய அணியின் தலைவிதியை நிர்ணயிக்க போகிறது.

புள்ளி பட்டியல்

புள்ளி பட்டியல்

தற்போது இருக்கும் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியாதான் முதல் இடத்தில் இருக்கிறது. 8 போட்டிகளில் 7ல் வென்று ஆஸ்திரேலியா அணி முதலிடம் வகிக்கிறது. இந்தியா 8 போட்டிகளில் 7ல் வென்று இரண்டாம் இடம் வகிக்கிறது. நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக வென்றதன் மூலம் இங்கிலாந்து அணி 3ம் இடம் பிடித்துள்ளது. நியூசிலாந்து 4வது இடம் பிடித்துள்ளது. இந்த அணிகள்தான் தற்போது செமி பைனலுக்குள் செல்ல போகிறது.

என்ன வாய்ப்பு

என்ன வாய்ப்பு

அதன்படி தற்போது இருக்கும் புள்ளி பட்டியலின்படி இந்தியா இங்கிலாந்து அணியை செமி பைனலில் சந்திக்கும். ஆஸ்திரேலியா நியூசிலாந்து செமி பைனலில் மோதும். இதில் கடைசி நேரத்தில் மாற்றமும் நிகழ வாய்ப்புள்ளது. மொத்தம் மூன்று விதமான மாற்றங்கள் இதில் நடைபெறலாம்.

மாற்றம் 1

மாற்றம் 1

இந்தியா இலங்கை இடையே வரும் சனிக்கிழமை லீக் ஆட்டம் நடைபெற உள்ளது. இதில் இலங்கை வெற்றிபெற்று இந்தியா தோல்வி அடைந்தால் புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்படாது. இதனால் இந்தியா செமி பைனலில் கண்டிப்பாக இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு வரும்.

அடுத்த மாற்றம்

அடுத்த மாற்றம்

அடுத்தாக இந்தியா இலங்கை அணியை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தால் இந்தியா புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடிக்கும். அப்படி நடந்தால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியுடன் செமி பைனலில் இந்தியா மோத வேண்டிய நிலை ஏற்படும்.

கடைசி என்ன

கடைசி என்ன

அப்படி இல்லாமல் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா போட்டி மழையால் தடைபட்டு அந்த அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டாலும் இந்தியா இங்கிலாந்து அணியைத்தான் செமி பைனலில் சந்திக்கும். இந்தியா இலங்கையுடன் வென்றாலும், தோல்வி அடைந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் இங்கிலாந்து அணியைத்தான் செமி பைனலில் சந்திக்கும்.

ஒரே வாய்ப்பு

ஒரே வாய்ப்பு

இதனால் மூன்று வாய்ப்புகளில் இரண்டின்படி, இந்தியா இங்கிலாந்துதான் செமி பைனலில் மோத இருக்கிறது. இந்தியா இங்கிலாந்திடம் மட்டும்தான் இந்த லீக் தொடரில் தோல்வி அடைந்தது. இதனால் செமி பைனலில் அதேபோல் தோல்வி அடையாமல் இருக்க இந்தியா கண்டிப்பாக கடும் முயற்சி எடுக்கும். இந்த ஆட்டம் மிக முக்கியமான போட்டியாக இருக்க போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 4, 2019, 10:23 [IST]
Other articles published on Jul 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+