Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி ரோஹித் இடையில் மோதல்.. சண்டைக்கு காரணமான இளம் வீரர்.. வெளிவந்த பரபரப்பு உண்மை?

Recommended Video

WORLD CUP 2019 | கோலி மீது நடவடிக்கை எடுக்க பிசிசிஐ திட்டம்?

டெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்தியா வெளியேறியதை அடுத்து கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு இடையில் பெரிய பிரச்சனை நிகழ்ந்து வருகிறது.

இதுவரை வெளியே தெரியாமல் இருந்த பிரச்சனை தற்போது பூதாகரம் எடுக்க தொடங்கி இருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த முறை இந்தியா செமி பைனல் வரை சென்றது.

செமி பைனலில் இந்தியா நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் தற்போது இந்திய அணிக்குள் சில குழப்பங்கள் நிலவி வருகிறது.

என்ன குழப்பம்

என்ன குழப்பம்

அதன்படி இந்திய அணிக்குள் வீரர்கள் ரோஹித் சர்மா குழு, விராட் கோலி குழு என்று இரண்டு குழுக்கள் இருப்பதாக தெரிகிறது. ரோஹித் சர்மா நீண்ட நாட்களாக இந்திய அணியின் கேப்டனாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்.

தேர்வு பிரச்சனை

தேர்வு பிரச்சனை

ரோஹித் சர்மா துணை கேப்டனாக இருந்தாலும், கோலி வீரர்களை தேர்வு செய்யும் போது, ரோஹித் சர்மாவை ஆலோசிப்பதே இல்லை என்று புகார் எழுந்துள்ளது. களத்தில் மட்டும் கோலி ரோஹித் சர்மாவிடம் ஆலோசனை நடத்துகிறார். ஆனால் அணியை தேர்வு செய்யும் நேரத்தில் ரோஹித் சர்மாவிடம் ஆலோசனை செய்வதில்லை என்கிறார்கள்.

அதிக முக்கியம்

அதிக முக்கியம்

அதேபோல் கோலி தனக்கு விசுவாசமாக இருக்கும் வீரர்களையே அதிகம் தேர்வு செய்கிறார். ரோஹித் சர்மாவிற்கு நெருக்கமாக இருக்கும் வீரர்கள் நன்றாக விளையாடினாலும் அவர்களை எடுப்பது கிடையாது என்று கூறுகிறார்கள். அதேபோல் விஜய் சங்கரை வேண்டாம் என்று ரோஹித் தொடர்ந்து கூறிய பின்பும் அவரை கோலி எடுத்ததாக தகவல்கள் வருகிறது.

விஜய் சங்கர்

விஜய் சங்கர்

ரோஹித் சர்மா அம்பதி ராயுடுவை அணியில் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் கோலி விஜய் சங்கரை தேர்வு செய்து இருக்கிறார். இது இவர்களுக்கு இடையில் பெரிய விரிசலை உண்டாக்கி இருப்பதாக தெரிகிறது. இதுதான் தற்போது இந்திய அணிக்குள் பூதாகரமான பிரச்சனையாக வெடித்துள்ளது.

என்ன தீர்வு

என்ன தீர்வு

இந்த பிரச்சனையை வரும் பிசிசிஐ கூட்டத்தில் சரி செய்ய இந்திய அணி முடிவெடுத்து இருக்கிறது. இதில் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். பெரும்பாலும் கடைசி நேரத்தில் இதில் ரோஹித் சர்மாவும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Story first published: Sunday, July 14, 2019, 7:53 [IST]
Other articles published on Jul 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+