எதிர்பார்க்கவில்லை.. இவங்கதான் முதல் இடமா?.. உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் டாப்பில் யார் தெரியுமா?
லண்டன்: நேற்று பெய்த மழை காரணமாக உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத அணி முதல் இடத்தில் இருக்கிறது.
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு மழை பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. இந்த மழைகாரணமாக வரிசையாக நிறைய போட்டிகள் தடை ஆகி வருகிறது.
முக்கியமான போட்டிகள் கூட மழையால் தடை பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

என்ன நடந்தது
இங்கிலாந்தில் மழை காரணமாக வரிசையாக போட்டிகள் ரத்தாகி வருகிறது. அங்கு இன்னும் மழை தொடரும் என்று வானிலை மைய அதிகாரிகள் எச்சரித்து இருக்கிறார்கள். இதனால் இனி நடக்க உள்ள இன்னும் சில முக்கியமான போட்டிகள் மழையால் தடைபடும் என்று கூறுகிறார்கள்.

நான்கு போட்டிகள்
மழை காரணமாக இலங்கை வங்கதேசம், இலங்கை பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக நேற்று நியூசிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான போட்டிகள் ரத்து செய்யப்பட்டது . இதனால் மொத்தம் 4 போட்டிகள் இந்த தொடரில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பட்டியல் என்ன
தற்போது 7 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. ஆஸ்திரேலியா 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்தியா ஐந்து புள்ளிகளுடன் 3 இடம் வகிக்கிறது. இங்கிலாந்து 4 புள்ளிகளுடன் 4ம் இடம் வகிக்கிறது.

மற்ற இடம்
மற்ற இடங்களை இலங்கை, மேற்கு இந்திய தீவுகள், வங்கதேசம், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் பிடித்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த புள்ளி பட்டியலில் இந்த வாரம் நிறைய மாற்றங்கள் நடக்கும். இந்திய அணி முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
மழைதான்
இந்த நிலையில் மழைதான் இந்த புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது என்றும் சிலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். நியூசிலாந்து கிடையாது, மழைதான் இதில் டாப்பில் இருக்கிறது என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆம் சரியாக பார்த்தால் மழைதான் 4 போட்டிகளை காலி செய்து வென்றுள்ளது. அதனால் அதற்குத்தான் 8 புள்ளிகள் கொடுக்க வேண்டும். இதனால் மழைதான் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்று சிலர் டிவிட் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications