Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பை தொடர் நாயகன்.. இந்த 4 பேரில் ஒருவர்தான்.. சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த அந்த வீரர்!

லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த முறை 4 முக்கிய வீரர்களுக்கு இடையில் தொடர் நாயகன் விருது பெறுவதற்கான போட்டி நடந்து வருகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பல ஆச்சர்யங்களை சுமந்து நிகழ்ந்து வருகிறது. எந்த வீரர் அதிரடியாக செஞ்சுரி அடித்து, ஆட்டத்தை போக்கை மாற்றுவார் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.

இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் சிறப்பாக விளையாடி உள்ளது. இந்த ஐந்தில் 4 அணிகள்தான் உலகக் கோப்பை செமி பைனலுக்கு செல்ல வாய்ப்புள்ளது.

நான்கு பேர்

நான்கு பேர்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்த ஐந்து அணிகள் எப்படி வலுவாக இருக்கிறதோ அதேபோல் இந்த ஐந்து அணியிலும் 5 வீரர்கள் அதிக ரன்களை குவித்து இருக்கிறார்கள். இந்த 5 வீரர்கள்தான் பெரும்பாலும் அந்த அணிகளின் வெற்றிக்கு காரணமாக இருப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் 4 வீரர்களுக்கு இடையில்தான் உலகக் கோப்பை தொடர் நாயகனுக்கான போட்டி நடக்கிறது.

ஆரோன் பின்ச்

ஆரோன் பின்ச்

இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக வெறியுடன் ஆடும் வீரர் என்றால் அது ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச். இவர் இந்த தொடரில் 343 ரன்களை அடித்து இருக்கிறார். ஆஸ்திரேலியா அணியில் வார்னர், ஸ்மித் சொதப்பும் சமயங்களில் இவர்தான் அணிக்கு உதவி வருகிறார். தொடர் நாயகன் விருதுக்கு நடக்கும் போட்டியில் இவர் முக்கிய இடம் வகிக்கிறார்.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

அதேபோல் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா தற்போது தன்னுடைய வாழ்நாள் பார்மில் இருக்கிறார். இந்த தொடரில் இவர் இதுவரை 319 ரன்களை அடித்துள்ளார். இவர் ஆடும் வேகத்துக்கு இந்த தொடரில் டாப் ஸ்கோரராக மாறி தொடர் நாயகன் விருது பெற கூட வாய்ப்புள்ளது.

ஷாகிப் அல் ஹசன்

ஷாகிப் அல் ஹசன்

இந்த உலகக் கோப்பை தொடரில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்திருக்கும் வீரர் என்றால் அது ஷாகிப் அல் ஹசன். வங்கதேசம் அணியின் ரட்சகராக மாறி இவர் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இதுவரை 384 ரன்களை குவித்து இருக்கிறார். இதில் இரண்டு செஞ்சுரி அடக்கம். அதேபோல் தற்போது இவர் உலகக் கோப்பையில் டாப் ஸ்கோரர். இந்த உலகக் கோப்பையின் இவரின் வங்கதேச அணி சரியாக விளையாடினால் கண்டிப்பாக இவருக்கு தொடர் நாயகன் விருது கிடைக்க வழியுள்ளது.

இயான் மோர்கன்

இயான் மோர்கன்

அதேபோல் இங்கிலாந்து வீரர் இயான் மோர்கன் தொடர் நாயகனுக்கான போட்டியில் இருக்கிறார். நேற்று போட்டியில் இவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 17 சிக்ஸர், 4 பவுண்டரி அடித்தார். இவர் 148 ரன்கள் இருக்கும் போது அவுட்டானார். இந்த தொடரில் இனி வரும் போட்டியில் இதேபோல் ஆடினால் இவரும் தொடர் நாயகன் ஆக வாய்ப்புள்ளது.

Story first published: Wednesday, June 19, 2019, 15:29 [IST]
Other articles published on Jun 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+