Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரின் தப்புதான்.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டார்.. இந்திய அணிக்குள் இன்று என்ட்ரி தரும் புது முகம்!

லண்டன்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணியில் விளையாட போகும் புதிய வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலகக் கோப்பை தொடரில் இன்று இந்திய அணி தனது 6வது லீக் ஆட்டத்தை விளையாட இருக்கிறது. இந்த தொடரில் இது ஒன்றும் அவ்வளவு முக்கியமான ஆட்டம் இல்லை என்று கூட சொல்லலாம்.

ஏனென்றால் எப்படியும் இந்திய அணிதான் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்த போகிறது என்று 99.9% கணிப்புகள் கூறுகிறது. ஆனாலும் இந்த போட்டி வேறு ஒரு விஷயத்திற்காக முக்கியத்துவம் பெறுகிறது.

என்ன நடக்கிறது

என்ன நடக்கிறது

இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இதனால் தற்போது இந்திய அணியின் தொடக்க வீரராக கே எல் ராகுல் களமிறங்கி வருகிறார். சென்ற போட்டியிலும் அவர் அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தார்.

இன்று எப்படி

இன்று எப்படி

இந்த நிலையில் இந்த அணியில் 4வது வீரராக தற்போது விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் அவரின் ஆட்டம் பெரிய அளவில் நம்பிக்கை கொடுக்க கூடிய ஒன்றாக இல்லை. அவர் நன்றாக பவுலிங் போட்டாலும், பேட்டிங்கில் இன்னும் திணறத்தான் செய்கிறார். இதனால் அவருக்கான வாய்ப்பு கேள்விக்குறியாகவே இருக்கிறது. விஜய் சங்கர் தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை நழுவ விட்டுவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.

காலில் காயம்

காலில் காயம்

அதேபோல் இரண்டு நாட்களுக்கு முன் பயிற்சியின் போதும் விஜய் சங்கர் காயம் அடைந்தார், பும்ரா போட்ட பந்தில் அவர் மோசமாக காயம் அடைந்தார். இந்த காயம் சரியாகி விட்டாலும் விஜய் சங்கர் இன்னும் முழு உடல் தகுதியை நிரூபிக்கவில்லை என்று கூறுகிறார்கள். இதனால் அவரின் இடத்திற்கு யார் வரப்போகிறார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

எப்படி

எப்படி

தற்போது இந்திய அணியில் அவரின் இடத்திற்கு 3 வீரர்களுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு இடையில் அணியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இவர்கள் மூவரில் இன்று ஒருவர் விளையாட இருக்கிறார்.

வாய்ப்பு

வாய்ப்பு

அந்த வகையில் இன்று பெரும்பாலும் ரிஷப் பண்ட் களமிறங்குவார் என்று கூறுகிறீர்கள். அவர் மட்டும்தான் அணியில் நேற்று பயிற்சி எடுத்தது. மற்ற இந்திய வீரர்கள் எல்லோரும் ஓய்வு எடுத்த நிலையில் இவர் மட்டும் பேட்டிங் பயிற்சி எடுத்ததால் அவர் அணிக்குள் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Saturday, June 22, 2019, 8:19 [IST]
Other articles published on Jun 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+