Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் பெரிய சிக்கல்.. வீட்டிற்கு செல்லும் தவான்.. புதிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் இவர்தான்!

Recommended Video

வீட்டிற்கு செல்லும் தவான்.. புதிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் இவர்தான்!

லண்டன்: இந்திய உலகக் கோப்பை அணியின் புதிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் யார் என்று கேள்வி எழுந்து இருக்கிறது. இதற்காக நிறைய பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி கொஞ்சம் கூட நினைக்காத அதிர்ச்சிகரமான விஷயம் இன்று வெளியாகி உள்ளது.இந்திய அணியில் இருந்து தவான் வெளியேறி இருக்கிறார்.

கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு தவான்தான் காரணம். இவரின் அதிரடிதான் இந்திய அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றது.

செஞ்சுரி போட்டார்

செஞ்சுரி போட்டார்

இந்த போட்டியில் தவான் மிகவும் அதிரடியாக ஆடினார். தவான் 109 பந்தில் 16 பவுண்டரியுடன் மொத்தம் 117 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் தவானுக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதான் தற்போது இந்திய அணிக்கு சிக்கலாக மாறியுள்ளது.

எப்படி காயம்

எப்படி காயம்

ஆஸ்திரேலிய பவுலர் நாதன் நைல் போட்ட பந்து கையில் பட்டு இவரின் இடது கையில் பெருவிரல் காயம் பட்டது. இந்த காயம் போட்டியின் போதே வீங்கிக் கொண்டே சென்றது. இதனால் அந்த போட்டி முழுக்க அவர் அவதிப்பட்டார். கடைசியில் இரண்டாவது பாதியில் ஓய்வு எடுத்தார்.

நீக்கப்பட்டார்

நீக்கப்பட்டார்

இந்த நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் தவான் மூன்று வாரங்களுக்கு நீக்கப்பட்டு இருக்கிறார். காயம் காரணமாக மருத்துவர்கள் மூன்று வாரம் இவரை ஓய்வு எடுக்க சொல்லி இருக்கிறார்கள். இன்று வந்த ஸ்கேன் ரிப்போர்ட்டில் இருந்த அறிவுரையின்படி அவர் நீக்கப்பட்டு இருக்கிறார்.

யார் வருகிறார்

யார் வருகிறார்

இதனால் தற்போது இந்திய அணிக்குள் தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் எடுக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வருகிறது. தினேஷ் கார்த்திக் 4 வது இடத்தில் ஆட கூடியவர். விஜய் சங்கரும் நல்ல ஆல்ரவுண்டர். இதனால் இவர்கள் இருவரில் ஒருவரை அணியில் எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

எங்கு விளையாடுவார்கள்

எங்கு விளையாடுவார்கள்

இவர்கள் அணியில் எடுக்கப்பட்டால் 4 வது இடத்தில் ஆட வைக்கப்படுவார்கள். 4வது இடத்தில் ஆடும் கே எல் ராகுல் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார். கே எல் ராகுல் ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் ஓப்பனிங் இறங்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதான் இப்போது பெரும்பாலும் அணியில் செய்யப்படும் மாற்றமாக இருக்க போகிறது என்கிறார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

அதே சமயம் அணியில் ஷ்ரேயஸ் ஐயர் அல்லது ரிஷப் பேண்டை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவர்களை தொடக்க வீரர்களாக இறக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, June 11, 2019, 14:44 [IST]
Other articles published on Jun 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+