Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் 15 நாள்தான்.. வரப்போவது யார்? இந்திய அணிக்குள் பதில் தெரியாத ஒரு கேள்வி.. எதிர்பார்ப்பு!

Recommended Video

World Cup 2019 : தோல்விக்கான காரணம் இவர்கள் தான்.. பழியை போட்ட ரவி சாஸ்திரி- வீடியோ

லண்டன்: உலகக் கோப்பை தொடர் முடிய உள்ள நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இன்னும் சில நாட்களில் மாற்றப்பட உள்ளது.

தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருக்கிறார். இவருக்கு கீழ் இந்திய அணி பெரிய அளவில் கோப்பைகளை அடிக்கவில்லை.

ஆனாலும் கூட இந்திய அணி மிக சிறப்பான அணியாகவே ரவி சாஸ்திரியின் தலைமையின் கீழ் இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்தியா வெளியேறி இருக்கிறது.

அவுட்

அவுட்

செமி பைனல் போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. இதையடுத்து இந்தியாவின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது. இதனால் இந்திய அணி நிர்வாகிகள் மீது பிசிசிஐ அமைப்பு கடும் கோபத்தில் உள்ளது. இந்த வாரம் அணி வீரர்களுடன் பிசிசிஐ நிர்வாகம் ஆலோசனை நடத்த உள்ளது.

இன்னும் 15 நாட்கள்

இன்னும் 15 நாட்கள்

தற்போது இருக்கும் இந்திய அணியின் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்கலாம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொஞ்சம்தான்

கொஞ்சம்தான்

இன்னும் 15 நாட்களில் இந்த நீட்டிப்பு முடிகிறது. அதன்பின் புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டும். இதற்காக இப்போதே பிசிசிஐ ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. யாரை நியமிப்பது என்று பிசிசிஐ தீவிர யோசனையில் உள்ளது.

முன்னாள் வீரர்கள்

முன்னாள் வீரர்கள்

இதற்காக பிசிசிஐ முன்னாள் இந்திய அணி வீரர்கள் சிலரை பரிசீலனையில் வைத்துள்ளது. கங்குலி காலத்தில் இந்திய அணியில் விளையாடிய வீரர்களை பிசிசிஐ பரிசீலித்து கொண்டு இருக்கிறது. அதேபோல் மற்ற நாடுகளை சேர்ந்த ஜாம்பவான் வீரர்களையும் பிசிசிஐ கருத்தில் கொண்டுள்ளது.

யார் எல்லாம்

யார் எல்லாம்

இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக பின் வரும் நபர்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது.

ராகுல் டிராவிட்

ரிக்கி பாண்டிங்

கங்கலி

வார்னே ஆகியோரில் யாராவது ஒருவர் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Story first published: Sunday, July 14, 2019, 16:14 [IST]
Other articles published on Jul 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+