Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் வந்தா போதும்.. இந்தியா சொல்லி அடிக்கும்.. தவானுக்கு பதில் பிசிசிஐ குறி வைக்கும் 19 வயது புயல்

லண்டன்: இந்திய அணியில் தவானுக்கு பதில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்க இளம் வீரர் ஒருவரை பிசிசிஐ பரிசீலனையில் வைத்து இருக்கிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக தவான் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு இடதுகை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் இவரை மூன்று வாரம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்து இருக்கிறார்கள். இவரின் இடத்தில் யாரை களமிறக்குவது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

தவான் எப்படி

தவான் எப்படி

இந்த நிலையில் தவானுக்கு பதில் முதல் இடத்தில் கே எல் ராகுலை களமிறக்க செய்யலாம். ஆனால் அப்படி செய்தால் நான்காவது இடத்தில் ஆடுவதற்கு சரியான வீரர்கள் இல்லாமல் போய்விடும். தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இருந்தாலும், அவர்கள் எல்லா போட்டியிலும் ஆடுவார்களாக என்பது சந்தேகமே. அதேபோல் கே எல் ராகுல் 4வது இடத்திற்கு பல மாதமாக பயிற்சி எடுத்ததால், அவரால் முதல் இடத்தில் ஆடுவது கடினம்.

முடியாது

முடியாது

இதனால் கே எல் ராகுலை முதல் இடத்தில் இறக்கும் முட்டாள் தனத்தை இந்திய அணி செய்யாது என்று கூறுகிறார்கள். அதற்கு பதிலாக அவரை நான்காவது இடத்திலேயே விளையாட சொல்வார்கள். இதனால் முதல் இடத்திற்கு வேறு ஒரு நபரை களமிறக்க வேண்டும். ஆனால் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கரை ஓப்பனிங் இறக்க முடியாது.

யார் இவர்

யார் இவர்

ஆகவே முதல் இடத்திற்காக இளம் வீரர் ஒருவரை அணிக்குள் கொண்டு வர பிசிசிஐ முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. அந்த வீரர் யாரும் கிடையாது, இந்திய அணியில் கடந்த வருடம் அறிமுகம் ஆன சுப்மான் கில்தான். இவருக்கு தற்போது 19 வயதுதான் ஆகிறது. கடந்த வருடம் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் அண்டர் 19 போட்டியில் இவர்தான் தொடர் நாயகன் விருது பெற்றார்.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

இந்திய அணியின் வெற்றிக்கு அந்த தொடரில் இவர்தான் காரணமாக இருந்தார். அதேபோல் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியிலும் இவர் மிக முக்கியமான வீரராக இருந்தார். தொடக்க வீரராக இறங்க கூடிய இவர் சச்சின் போல ஆட கூடியவர். அதேபோல் சேவாக் போல இவரால் அதிரடியாகவும் ஆட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றாக இருக்கும்

நன்றாக இருக்கும்

ஆனால் இவர் ஒருநாள் தொடரில் அறிமுகம் ஆன போது பெரிய அளவில் சரியாக விளையாடவில்லை. நியூசிஸிலாந்துக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு கிடைத்தாலும் பதற்றம் காரணமாக சரியாக ஆடவில்லை.ஆனால் இவரை அணியில் எடுத்தால் கண்டிப்பாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று கூறுகிறார்கள்.

வாழ்த்து

வாழ்த்து

இந்திய வீரர்கள் மட்டுமில்லாமல் வேறு நாட்டை சேர்ந்த வீரர்கள், ஆஸ்திரேலியா வீரர்கள், கெவின் பீட்டர்சன் உள்ளிட்ட முன்னாள் லெஜண்ட்கள் உட்பட பலர் எல்லோரும் இவரை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள். அதனால் இவர் தவானுக்கு பதில் உலகக் கோப்பை அணியில் களமிறக்கப்படுகிறாரா என்று பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Wednesday, June 12, 2019, 12:41 [IST]
Other articles published on Jun 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+