2 தமிழர்களுக்குள் நடக்கும் போட்டி.. இந்திய அணியில் அந்த இடம் யாருக்கு.. இவர்தான் சரியான நபர்!
லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் 6வது இடத்தில் யார் களமிறங்க போவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் இரண்டு தமிழர்களுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மற்ற எல்லா அணிகளும் குறைந்தது ஒரு போட்டியாவது உலகக் கோப்பையில் விளையாடிவிட்டது.
ஆனால் ஐபிஎல் காரணமாக இந்திய அணி இன்னும் ஒரு போட்டியை கூட விளையாடவில்லை. நாளைதான் இந்தியா - தென்னாபிரிக்கா அணிகள் மோதும் போட்டி நடக்க உள்ளது.

என்ன முக்கியம்
இந்திய அணி இந்த முறை 4 பவுலர்களுடன் களமிறங்க முடிவெடுத்து இருக்கிறது. அதன்படி, சாஹல், குல்தீப், பும்ரா, ஷமி அல்லது புவனேஷ்வர்குமார் களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது. இது இல்லாமல் ஆல் ரவுண்டர் பவுலர் பாண்டியா கண்டிப்பாக அணியில் இடம்பிடிப்பார். இதனால் கடைசி ஐந்து இடங்கள் அணியில் ஏற்கனவே ரிசர்வ் செய்யப்பட்டுவிட்டது.

மீதம் இருக்கும் 6 இடங்கள்
மீதம் இருக்கும் 6 இடங்கள் மட்டுமே இப்போது பிரச்சனை. அதிலும் கூட ஓப்பனிங் ரோஹித், தவான், ஒன் டவுன் கோலி என்பதும் உறுதியாகிவிட்டது. மீதம் இருப்பது 4,5, 6 இடங்கள் மட்டுமே. இதில் 5 வது இடத்தில் தோனி களமிறங்குவார் என்பது உறுதியாகிவிட்டது. 4 வது இடத்தில் கே. எல். ராகுல் அல்லது கேதார் ஜாதவ் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.

ஏன் 4 முக்கியம்
இந்தியாவில் பாண்டியாவுடன் சேர்த்து ஏற்கனவே 5 பவுலர்கள் இருக்கிறார்கள். இதனால் கோலி பெரும்பாலும் கேதார் ஜாதவிற்கு பதில், கே. எல் ராகுலை எடுக்கவே அதிகம் வாய்ப்புள்ளது. அவரும் பயிற்சி ஆட்டத்தில் செஞ்சுரி அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் என்ன
ஆனால் இந்தியாவில் 6 வது இடத்தில் யாரை ஆட வைப்பது என்பதுதான் தற்போது குழப்பமாக இருக்கிறது. 6 வது இடத்திற்கு தற்போது இரண்டு தமிழர்களுக்கு இடையில் போட்டி நிலவி வருகிறது. விஜய் சங்கர் அந்த இடத்தில் இறங்குவாரா அல்லது தினேஷ் கார்த்திக் அந்த இடத்தில் இறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினேஷ் கார்த்திக்
இதில் தினேஷ் கார்த்திக் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். நன்றாக கீப்பிங், பீல்டிங் செய்ய கூடியவர். அதேபோல் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். ஆனால் இவரால் பவுலிங் போட முடியாது. இவரின் அனுபவம் அணிக்கு உதவுமா, இவர் அணியில் எடுக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

விஜய்
அதே சமயம் விஜய் சங்கர் நன்றாக பேட்டிங் மற்றும் பவுலிங் செய்ய கூடியவர். முக்கியமான நேரத்தில் அணிக்கு உதவுவார். பாண்டியாவின் சுமையை இவர் பெரிய அளவில் குறைப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் இவர்கள் இருவரில், கோலி 6 வது இடத்திற்கு யாரை தேர்வு செய்வார் என்ற கேள்வி எழுந்து உள்ளது.


Click it and Unblock the Notifications