எத்தனை விக்கெட் எடுத்து என்ன பயன்.. இன்று வாய்ப்பு கிடைப்பதே சந்தேகம்தான்.. சோகத்தில் மூத்த வீரர்!
லண்டன்: இந்திய அணியின் பவுலிங் ஆர்டரில் இன்று நிறைய மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறார்கள். முக்கியமான சில வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டு பழைய வீரர்கள் அணிக்குள் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியா செமி பைனலுக்கு செல்ல இன்னும் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற வேண்டும். இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடக்கிறது.
இன்று நடக்கும் போட்டியில் வெற்றிபெற்றால் இந்தியா கண்டிப்பாக செமி பைனல் சென்றுவிடும். இதனால் வங்க புலிகளுக்கு எதிரான போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

என்ன மாற்றம்
இந்திய அணியில் கடந்த மூன்று போட்டியிலும் முக்கியமான வீரராக, முக்கியமான கேம் சேஞ்சராக இருந்தவர் முகமது ஷமிதான். புவனேஷ்வர் குமார் காயம் அடைந்த பின் பாகிஸ்தான் போட்டிக்கு பின் ஷமி அணிக்குள் வந்தார். இவர் அணிக்குள் வந்த பின் இந்த அணியின் பவுலிங் அதிக பலம் பெற்றுள்ளது.

எத்தனை விக்கெட்டுகள்
இவர் வரிசையாக இதுவரை 3 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகள் எடுத்தார். இதில் ஹாட்ரிக் விக்கெட் அடக்கம். அதன்பின் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த நிலையில் கடைசியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் எடுத்தார்.

ஆனால் என்ன
ஆனால் காயத்துடன் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்த புவனேஷ்வர்குமார் தற்போது அணிக்குள் திரும்ப இருக்கிறார். இவர் நேற்றுதான் தன்னுடைய உடல் தகுதியை நிரூபித்தார். இவர் காயம் முழுவதுமாக குணமடைந்து உள்ளது. இதனால் இன்று நடக்கும் போட்டியில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட இருப்பதாக செய்திகள் வருகிறது.

அதிக ரன்கள்
ஷமி அதிக விக்கெட் எடுத்தாலும் நிறைய ரன்களை வாரி வழங்குகிறார். கடந்த போட்டியில் ஷமி வீசிய 8 மற்றும் 9வது ஓவர்களில் 30 ரன்கள் வரை கொடுத்தார். இதனால் இங்கிலாந்து அணியின் ரன் ரேட் அதிக அளவில் உயர்ந்தது. ஆனால் புவனேஷ்வர் குமார் அப்படி ரன் கொடுக்கும் வீரர் கிடையாது. இதனால் ஷமி அதிக விக்கெட் எடுத்தாலும் புவிக்கே அணியில் சேர வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications