Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியால் ஏற்படும் சிக்கல்.. இந்திய அணியில் காலியாக போகும் இரண்டு இடங்கள்.. குழப்பத்தில் கோலி!

Recommended Video

Dhoni Place : இந்திய அணியில் காலியாக போகும் இரண்டு இடங்கள்.. குழப்பத்தில் கோலி!- வீடியோ

லண்டன்: இந்திய அணியில் காலியாக போகும் இரண்டு இடங்களை எப்படி நிரப்புவது என்று தெரியாமல் கேப்டன் கோலி திணறிக்கொண்டு இருக்கிறார்.

இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளது. செமி பைனல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது.

அணியில் சரியாக விளையாடாமல் இருக்கும் வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் புதிய இளம் வீரர்கள் அணிக்குள் கொண்டு வரப்படலாம் என்று கூறுகிறார்கள்.

தோனி எப்போது

தோனி எப்போது

இந்த நிலையில்தான் இந்திய அணியில் இருந்து தோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறுவார் என்று செய்திகள் வருகிறது. அவர் உலகக் கோப்பை தொடர் முடிந்ததுமே ஓய்வு பெறுவார் என்று செய்திகள் முதலில் வந்தது. ஆனால் தற்போது வரை அதுகுறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் தோனி எப்படியும் இந்த வருட இறுதிக்குள் ஓய்வு பெறுவார் என்று கூறுகிறார்கள். நவம்பர் மாதம் இந்திய அணிக்கு புதிய தேர்வு வாரியத்தை அமைக்க இருக்கிறார்கள். அந்த தேர்வு வாரியம் அமைக்கப்படுவதற்குள் இந்திய அணியில் இருந்து தோனி ஓய்வு பெற வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

இரண்டு இடங்கள்

இரண்டு இடங்கள்

தோனி இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றால் இரண்டு இடங்கள் அணிக்குள் காலியாகும். ஒன்று கீப்பருக்கான இடம். இன்னொன்று அவர் களமிறக்கும் 6-வது பேட்ஸ்மேன் இடம். கீப்பருக்கான இடம் முதலில் காலியாகும். ஆனால் அதை கூட பண்டை வைத்து சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் பண்ட் இந்திய அணியில் 5வது வீரராக களமிறங்கி வருகிறார். 4வது இடத்தில் கே எல் ராகுல் களமிறங்குவார்.

யார் இறங்குவார்

யார் இறங்குவார்

7வது இடத்தில் பாண்டியா களமிறங்குவார். இதனால் தோனி எப்போதும் களமிறங்கும் 6வது இடத்தில் யார் களமிறங்க போவது என்ற கேள்வி எழுந்துள்ளது. தோனி செய்யும் பினிஷிங் பணியை யார் அணியில் இனி அவரைப்போல திறமையாக செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கோலி சிக்கல்

கோலி சிக்கல்

இந்த இடத்திற்கு கண்டிப்பாக தினேஷ் கார்த்திக் தேர்வாக மாட்டார். இதனால் அங்கு யார் வர போகிறார். எந்த இளம் வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும். கோலி என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Friday, July 12, 2019, 18:20 [IST]
Other articles published on Jul 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+