கெட்ட வார்த்தையில் திட்டினார்.. பும்ராவையே கோபப்படுத்திய அந்த நிகழ்வு.. நேற்று நடந்த பகீர் சம்பவம்!
Recommended Video
லண்டன்: பொதுவாக களத்தில் கோபத்தை காட்டாமல் பவுலிங்கில் மட்டும் ஆக்ரோஷம் காட்டும் பும்ரா நேற்று கெட்ட வார்த்தை சொல்லும் அளவிற்கு கோபம் அடைந்தார். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது உலகக் கோப்பை போட்டி தீவிரமாக நடந்து வருகிறது. இந்திய அணி செமி பைனலுக்கு தேர்வாகி இருக்கிறது. நேற்று நடந்த போட்டியில் வங்கதேசத்தை இந்தியா வீழ்த்தியது.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையில் நடந்த இந்த லீக் ஆட்டம் கடைசி வரை மிகவும் விறுவிறுப்பாக சென்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை போட்டியை இந்தியாதான் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது.

பும்ரா
பொதுவாக இந்திய வீரர் பும்ரா கோபம் அடைய மாட்டார். தன்னுடைய பந்தில் மோசமான நேரத்தில் பவுண்டரி போனால் கூட கோபம் அடைய மாட்டார். அதேபோல் தான் போட்ட பந்தில் வரும் கேட்சை வீரர்கள் விட்டால் கூட கோபம் அடையவே மாட்டார். யாரையும் இவர் திட்டியதும் கூட கிடையாது. வீரர்களை இவர் சீண்டியதும் இல்லை.

என்ன செய்தார்
ஆனால் நேற்றைய போட்டியில் இவர் தான் போட்ட கடைசி ஓவரில் கடும் கோபத்தில் இருந்தார். ஆம் அவர் போட்ட 48வது ஓவரில் ஐந்தாவது பந்தில் ருபேல் ஹுசைன் விக்கெட்டை எடுத்தார். அந்த விக்கெட்டை எடுத்துவிட்டு பும்ரா கோபமாக கத்தினார். அதேபோல் இந்தியில் பிரபலமாக இருக்கும் கெட்ட வார்த்தை ஒன்றையும் சொன்னார்.

பெரிய அதிர்ச்சி
அதற்கு அடுத்த பந்தே அதே கோபத்தோடு விக்கெட் எடுத்து ஆட்டத்தை முடித்தார். அவரின் இந்த கோபம் கோலியை கூட ஆச்சர்யப்படுத்தியது. இந்த நிலையில் இதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. நேற்று சமி போட்ட ஓவரில் அதிக அளவில் ரன்கள் சென்றது. ஷமி போட்ட 38வது ஓவரில் 4 பவுண்டரி ஒரு சிங்கிள் என்று மொத்தம் 17 ரன்களை வாரி வழங்கினார். அதன்பின் மீண்டும் வந்த ஷமி 42வது ஓவரில் 2 பவுண்டரி, 3 சிங்கிள் என்று 11 ரன்களை வாரி வழங்கினார்.

இதனால்தான்
இதனால் பும்ரா அதிக ரன்களை கட்டுப்படுத்த வேண்டியதாக இருந்தது. ஆனால் அவர் ஓவரிலேயே சையபுதீன் பவுண்டரிகளை பறக்க விட்டார். இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக பும்ரா கோபம் அடைந்தார். அதோடு அதற்கு 10 நிமிடத்திற்கு முன்புதான் பும்ராவிற்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனுடன் மைதானத்திற்கு வந்துதான் அவர் விளையாடினார். இதுவும் கூட அவரின் கோபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications