Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

45 நிமிடங்கள் பும்ராவிற்கு நடந்த ஊக்கமருந்து சோதனை.. ஏன் நடத்தப்பட்டது.. காரணம் இதுதான்?

லண்டன்: இந்தியாவின் முன்னணி பவுலரான ஜாஸ்பிரிட் பும்ராவிற்கு இன்று ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.

இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. மிகவும் தீவிரமாக இந்த போட்டிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நாளை இங்கிலாந்தில் இந்தியா விளையாடும் முதல் உலகக் கோப்பை போட்டி நடக்கிறது. இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் முதல் போட்டியில் மோதுகிறது.

பயிற்சி செய்கிறார்கள்

பயிற்சி செய்கிறார்கள்

இந்த நிலையில் இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள். போட்டியை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்பதற்காக தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள். நேற்று மாலையில் இருந்து பயிற்சி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பயிற்சி

பயிற்சி

இந்த நிலையில் பும்ரா பயிற்சி மேற்கொண்டு இருக்கும் போது அவரை வந்து ஊக்கமருந்து அதிகாரிகள் சந்தித்தனர். அவரை சோதனை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். இதனால் ஜாஸ்பிரிட் பும்ரா அவர்களுடன் அருகில் இருக்கும் சோதனை கூடத்திற்கு சென்றார்.

சோதனை செய்தனர்

சோதனை செய்தனர்

அங்கு பும்ராவிற்கு 45 நிமிடங்கள் சோதனை நடந்தது. சிறுநீரக சோதனை மற்றும் ரத்த சோதனை இரண்டும் செய்யப்பட்டது. சோதனையின் முடிவு இப்போது அறிவிக்கப்படாது. சோதனையின் முடிவு அறிக்கை இன்னும் சில நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி

எப்படி

தற்போது சர்வதேச அளவில் ஐசிசியின் நம்பர் ஒன் ஒருநாள் பவுலர் பும்ராதான். இதனால் இவரின் ஆட்டம் அதிக கவனத்திற்கு உள்ளாகி வருகிறது. நாளை இவர் எப்படி போடுகிறார் என்பதை பார்க்க எல்லோரும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று இவர் சோதனைக்கு உள்ளாகி உள்ளார்.

பொதுவாக நடக்கும்

பொதுவாக நடக்கும்

பொதுவாக பெரிய கோப்பைக்கான போட்டிகள் நடக்கும் போது முக்கியமான சில வீரர்கள் ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். விதிமுறை கடைபிடிப்பதற்காக இப்படி செய்வார்கள். வழக்கமாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன் இப்படி சோதனை செய்யப்படுவது வழக்கம்.

என்ன அடிப்படை

என்ன அடிப்படை

அதன் அடிப்படையில்தான் தற்போது பும்ரா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார் என்கிறார்கள். இவரை சோதனை செய்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது வழக்கமான நடவடிக்கைதான் என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

Story first published: Tuesday, June 4, 2019, 16:48 [IST]
Other articles published on Jun 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+