தோனி எங்கே.. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.. கோபத்தில் கத்திய கங்குலி.. அடுத்தடுத்த பரபரப்பு!
Recommended Video
லண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிராக தோனி இன்னும் பேட்டிங் களமிறங்காதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தற்போது கங்குலி கோபத்துடன் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான செமி பைனல் போட்டி தற்போது நடந்து வருகிறது. தொடக்கத்தில் இருந்தே போட்டி நியூசிலாந்துக்கு ஆதரவாக செல்கிறது.
நியூசிலாந்து பவுலர்களை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் சீட்டு கட்டு போல சரிந்து வருகிறார்கள். இந்தியா 200 ரன்களை எடுப்பதே சந்தேகம்தான் என்ற நிலை நிலவிவருகிறது.

என்ன அவுட்
இந்தியாவிற்கு எதிராக 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்களை நியூசிலாந்து அணி அடித்தது. தற்போது அந்த இலக்கை நோக்கி இந்தியா திணறி திணறி ஆடி வருகிறது. அதன்பின் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா 1 ரன்கள் அடித்து இருந்த நிலையில் ஹென்றி பந்தில் டாம் லதாமிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

வரிசையாக
அதன்பின் கோலி நியூசிலாந்தின் போல்ட் பந்தில் எல்பிடபிள்யு முறையில் அவுட்டானார். அதன்பின் கே எல் ராகுல் 1 ரன், தினேஷ் கார்த்திக் 25 பந்துகள் பிடித்து 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். இதன் பின் களமிறங்க வேண்டிய தோனி களமிறங்கவில்லை. தோனிக்கு பதிலாக பாண்டியா களமிறங்கி உள்ளார்.

கோபம் அடைந்தார்
முக்கியமான நேரத்தில் தோனி களமிறங்காதது சர்ச்சையாகி உள்ளது. இந்த விஷயம் தற்போது வர்ணனை செய்து கொண்டு இருந்த கங்குலியை கோபம் அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக பேசிய அவர், இந்திய அணி மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இன்னும் ஏன் தோனி வெளியே வரவில்லை. இதுதான் அவர் வெளியே வருவதற்கான சரியான நேரம். ஆனால் ஏன் இன்னும் அவர் களமிறங்கவில்லை.

ஏன் இப்படி
இப்போது அவரை போல அனுபவம் மிகுந்த வீரர்கள் களத்தில் இறங்கி அணியை வழி நடத்த வேண்டும். இப்போதும் கூட அவர் இறங்காதது வருத்தம் அளிக்கிறது. ஏன் பேட்டிங் ஆர்டரை இந்திய அணி மாற்றியது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது, என்று கங்குலி கேட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications