Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்படித்தான் தொடங்கியது.. அதற்காக அப்படியே முடிய வேண்டுமா? தோனியை கலங்கடித்த அந்த ஒரு நிகழ்வு!

Recommended Video

WORLD CUP 2019 : IND VS NZ : SEMI FINALS | தோனியை கலங்கடித்த அந்த ஒரு நிகழ்வு- வீடியோ

லண்டன்: இந்திய அணியின் அதிரடி வீரர் தோனி நேற்று அவுட்டான விதம் ரசிகர்களை பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த ரன் அவுட் ஒரு வகையில் தோனிக்கு பழைய வரலாற்றை நினைவு படுத்தி உள்ளது.

நியூஸிலாந்திற்கு எதிராக நேற்று நடந்த செமி பைனல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்தியா தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளது.

கடைசி வரை போராடிய இந்திய அணி கடைசி நொடியில் தோல்வியை தழுவி உள்ளது. இந்த மோசமான தோல்வி இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

என்ன நம்பிக்கை

என்ன நம்பிக்கை

நேற்று களத்தில் ஜடேஜா தோனி ஆடிய வரை போட்டி இந்தியாவின் வசம் இருந்தது. அதிலும் ஜடேஜா அவுட்டான பின்பும் கூட இந்தியா வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருந்தது. தோனி களத்தில் இருக்கிறார். அவர் இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தருவார் என்ற நம்பிக்கை இருந்தது.

அவுட்டானார்

அவுட்டானார்

தோனி தேவையில்லாமல் 48வது ஓவரில் ரன் அவுட் ஆனார். இந்திய அணிக்கு இரண்டு ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் தோனி அவுட்டானார். அவர் ரன் அவுட்டான நொடிதான் மொத்தமாக ஆட்டத்தை புரட்டிப்போட்டது.

அட பாவமே

அட பாவமே

தோனியின் இந்த ரன் அவுட் பெரிய அதிர்ச்சியை அளித்து உள்ளது. சரியாக அந்த நொடிதான் இந்த போட்டி இந்திய அணியின் கையை விட்டு போனது. அவரின் கடைசி உலகக் கோப்பை போட்டியாகும் இது.

முதல் போட்டி

முதல் போட்டி

தோனியின் முதல் ஒருநாள் போட்டியும் கூட இப்படித்தான். அவர் ரன் அவுட் மூலம்தான் அவுட்டானார். அந்த ரன் அவுட்டில் இருந்துதான் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. அதுதான் இந்திய அணியின் முகத்தை மாற்றியது. தற்போது அவரின் கடைசி உலகக் கோப்பை போட்டியும் அப்படித்தான் முடிந்துள்ளது.

போன போட்டி

போன போட்டி

அதேபோல் ஐபிஎல் போட்டியிலும் இந்த முறை கடைசி இறுதிப் போட்டியில் ரன் அவுட் மூலம்தான் தோனி அவுட்டானார். சென்னை அணி வெற்றியின் விளிம்பில் இருக்கும் நொடியில் தோனியை மும்பை அணி ரன் அவுட் செய்தது. அதில் சென்னை தோல்வி அடைந்தது. இப்போது இந்தியா தோல்வி அடைந்துள்ளது.

Story first published: Thursday, July 11, 2019, 10:21 [IST]
Other articles published on Jul 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+