Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மிகப்பெரிய ஷாக்கிங் டிவிஸ்ட் காத்திருக்கு..இன்று நடக்கும் போட்டிக்கு பின் இப்படி ஒரு சிக்கல் உள்ளதா?

லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் போட்டியை வைத்து மிக முக்கியமான டிவிஸ்ட் ஒன்று தொடரில் நிகழ போகிறது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

இன்று இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி லீக் ஆட்டம் நடக்கிறது. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றால், கண்டிப்பாக இந்தியா செமி பைனலுக்கு தேர்வாகி விடும்.

இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்கவில்லை. அதேபோல் இன்றைய போட்டியிலும் இந்தியா வெற்றியை குவிக்க போகிறது என்றே கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

எப்படி முக்கியம்

எப்படி முக்கியம்

ஆனால் இன்றைய போட்டி இங்கிலாந்து அணிக்கு மிக முக்கியமான ஒன்றாகும். மொத்தம் இந்த உலகக் கோப்பை தொடரில் மூன்று போட்டிகளில் இங்கிலாந்து தோல்வி அடைந்துள்ளது. அதிலும் வரிசையாக இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து தோல்வி அடைந்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் இங்கிலாந்து தோல்வி அடைந்துள்ளது.

என்ன

என்ன

இன்னும் இரண்டு லீக் போட்டிகளை இங்கிலாந்து சந்திக்க உள்ளது. அதில் ஒன்று இந்தியாவிற்கு எதிராக இன்று நடக்க உள்ளது. இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் இங்கிலாந்து அணி செமி பைனலுக்கு செல்வதற்கான 95% வாய்ப்பை இழந்துவிடும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஆம், ஏற்கனவே மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதால் இந்த இக்கட்டான நிலைக்கு இங்கிலாந்து சென்றுள்ளது.

செமி பைனல்

செமி பைனல்

செமி பைனலுக்கு செல்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தான் அணிக்கு வந்துள்ளது. இந்த வாரம் வங்கதேசம் அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டும். அதில் ஒருவேளை பாகிஸ்தான் வெற்றிபெற்று, இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றபெற்றால் அவ்வளவுதான். இங்கிலாந்து அணி செமி பைனலுக்கு செல்வதற்கான வாய்ப்பை இழக்கும்.

இன்னொரு போட்டி

இன்னொரு போட்டி

கடைசியாக இங்கிலாந்து நியூசிலாந்து அணியை அடுத்த வாரம் எதிர்கொள்ளும். ஆனால் அதில் வென்றாலும் அதிக ரன் ரேட் அடிப்படையில் இங்கிலாந்து வெல்ல வேண்டும். அது மிகவும் கஷ்டம் என்றே கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அதனால் இன்று நடக்கும் போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய இடியாப்ப சிக்கலில் சிக்கி உள்ளது இங்கிலாந்து அணி.

எப்படி

எப்படி

இதில் தோல்வி அடையும் பட்சத்தில் பாகிஸ்தான் அரை இறுதிக்கு செல்ல வாய்ப்பு பிரகாசம் ஆகும். இன்று நடக்கும் போட்டிக்கு பின் இங்கிலாந்து அணிக்கு இப்படி ஒரு சிக்கல் இருக்கிறது. இதனால்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் போட்டியை வைத்து மிக முக்கியமான டிவிஸ்ட் ஒன்று தொடரில் நிகழ போகிறது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Story first published: Sunday, June 30, 2019, 8:55 [IST]
Other articles published on Jun 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+