Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியை பற்றிய அந்த வீடியோ.. ஏன் இப்போது வெளியிட்டீர்கள்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்.. என்ன நடந்தது?

Recommended Video

Tribute to MS Dhoni : தோனி வீடியோவை இப்போது வெளியிட்டது ஏன்?- வீடியோ

லண்டன்: தோனியை குறித்து ஐசிசி வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தோனி..தோனி.. தோனி இப்போது இந்த ஒரு பெயர்தான் இணையம் முழுக்க வைரலாகிக் கொண்டு இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடர் தொடங்கியதில் இருந்தே தோனி டிரெண்டிங்கில்தான் இருக்கிறார்.

முதலில் தோனி தனது கிளவுஸ் காரணமாக சர்ச்சையில் சிக்கி வைரலானார். அதன்பின் மெதுவான ஆட்டம் காரணமாக இணையம் முழுக்க தோனி வைரலானார்.

மெதுவான ஆட்டம்

மெதுவான ஆட்டம்

ஒரு காலத்தில் அதிரடியாக ஆடி கடைசி நேரத்தில் போட்டியை மாற்றிய தோனி இப்போதெல்லாம் அதிரடியாக ஆடுவதில்லை. முக்கியமாக ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக அவர் ஆடிய விதம் பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. தோனிக்கு எதிராக பலர் கருத்து கூற தொடங்கினார்கள். முக்கிய வீரர்கள் கூட அவருக்கு எதிராக கருத்து கூறினார்கள்.

என்ன

என்ன

இந்த நிலையில் ஒருநாள் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற போகிறார் என்றும் செய்திகள் வெளியானது . உலகக் கோப்பை தொடரில் இந்தியா ஆடும் கடைசி போட்டிதான் தோனிக்கும் கடைசி போட்டி. அதன்பின் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆட மாட்டார் என்று அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியானது.

என்ன வீடியோ

இந்த நிலையில் தற்போது தோனி குறித்து ஐசிசி வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் தோனி எப்படி எல்லாம் போட்டியை மாற்றினார், எப்படி அணியை வழி நடத்தினார் என்று அவரின் சாதனைகள் பட்டியலிடப்பட்டு உள்ளது. அதேபோல் உலகின் முன்னணி வீரர்கள் பலர் தோனி குறித்து தங்கள் நினைவுகளை அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த வீடியோ மிகவும் உருக்கமான ஒன்றாக அமைந்து இருந்தது.

சர்ச்சை

இதுதான் தற்போது இணையத்தில் பெரிய சர்ச்சையாகி உள்ளது. தோனி குறித்து உலகக் கோப்பை தொடருக்கு இடையில் ஏன் இப்படி ஒரு வீடியோ வெளியிட வேண்டும். அவர் என்ன கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறாரா, ஏன் இப்போது வீடியோ என்று பலர் கேட்டு இருக்கிறார்கள். சிலர் நாளை தோனிக்கு பிறந்தநாள் அதனால்தான் அவரை குறித்து வீடியோ வெளியிட்டுள்ளனர் என்று கமெண்ட் செய்துள்ளனர்.

Story first published: Saturday, July 6, 2019, 13:50 [IST]
Other articles published on Jul 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+