2008ல் கோலி செய்த அதே சம்பவம்.. இந்தியா இந்தமுறை உலகக் கோப்பையை வெல்லும்.. இதுதான் காரணம்!
லண்டன் : 2008ல் கிரிக்கெட் உலகில் நடந்த சம்பவம் ஒன்றும் மீண்டும் நடப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் செம குஷியில் இருக்கிறார்கள்.
வரலாற்றில் சில விஷயங்கள் மீண்டும் மீண்டும் நடக்கும். சில முக்கிய சம்பவங்கள் அச்சு பிசகாமல் அப்படியே நடப்பது வழக்கம். உலகம் பலமுறை இந்த ஆச்சர்யத்தை கண்கூட கண்டு இருக்கிறது.
அப்படித்தான் உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணிக்கு முக்கியமான விஷயம் ஒன்று நடக்க உள்ளது. 2008ல் கிரிக்கெட் உலகில் நடந்த முக்கியமான விஷயம் ஒன்று இந்த வருட உலகக் கோப்பையில் நடக்க இருக்கிறது.

என்ன விஷயம்
2008 அண்டர் 19 உலகக் கோப்பை மலேசியாவில் நடந்தது. இந்திய அணியை அப்போது மீசை முளைக்காத சிறுவன் கோலி வழிநடத்திக்கொண்டு இருந்தான். ஆம் கோலி தலைமையில் இந்தியா அந்த அண்டர் 19 உலகக் கோப்பையில் விளையாடியது. அந்த தொடர் முழுக்க இந்தியாதான் ஆதிக்கம் செலுத்தியது.

செமி பைனல்
அந்த தொடரில் இந்தியா செமி பைனலில் எதிர்கொண்ட அணி நியூசிலாந்து. அப்போது நியூசிலாந்து அண்டர் 19 அணியின் கேப்டனாக இருந்தது வேறு யாரும் இல்லை. இப்போது நியூசிலாந்து அணியின் கேப்டனாக இருக்கும் அதே கேன் வில்லயம்சன்தான். இரண்டு அணிகளுக்கும் இடையில் செமி பைனல் போட்டி மிகவும் பரபரப்பாக நடந்தது.

இந்தியா வெற்றி
அந்த போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 41 ஓவரிலேயே 197 ரன்கள் எடுத்தது. கடைசியில் மழை குறுக்கிட்டதால் , இந்திய அணி டிஎல்எஸ் முறையில் வெற்றிபெற்றது. தற்போது 11 வருடங்கள் கழித்து அதே வரலாறு மீண்டும் நடக்க போகிறது.

மீண்டும் நடக்கும்
ஆம் 11 வருடங்கள் கழித்து மீண்டும் இந்தியா நியுசிலாந்து அணிகள் செமி பைனலில் உலகக் கோப்பையில் மோதுகிறது. அப்போது அண்டர் 19 கேப்டன்களாக இருந்தவர்கள் கோலி - வில்லியம்சன்தான் இப்போது சீனியர் அணிகளுக்கு கேப்டன்களாக இருக்கிறார்கள். இதனால் இந்த போட்டியிலும் இந்தியா வென்று பைனலுக்கு செல்ல போகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.

யார் வெற்றி
2008 அண்டர் 19 உலகக் கோப்பையை இந்தியாதான் கைப்பற்றியது. கோலிதான் அப்போதும் சாம்பியன். இதனால் இந்த முறையும் இந்தியா மீண்டும் உலகக் கோப்பையை வெல்ல போகிறதா என்ற ரசிகர்கள் கடும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications