Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்டியை வெல்வது நோக்கம் அல்ல.. கோலி பிளானே வேறு பாஸ்.. முதலில் பேட்டிங் தேர்வு இதுதான் காரணம்!

Recommended Video

WORLD CUP 2019 IND VS AFG | இந்தியா சொதப்பல், ஆப்கானிஸ்தானுக்கு 225 ரன்கள் இலக்கு

லண்டன்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்வதற்கு பின் முக்கிய காரணம் இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள்தான் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இதில் இந்திய கேப்டன் கோலி டாஸ் வென்றார். டாஸ் வென்ற கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்ய முடிவு செய்தார்.

நிலை என்ன

நிலை என்ன

தற்போது உள்ள புள்ளி பட்டியலின் அடிப்படையில், ஆஸ்திரேலியா அணி 6 போட்டியில் 5 போட்டியில் வென்று முதல் இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து 5 போட்டியில் 4ல் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து ஆறு போட்டியில் 4ல் வென்று மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இந்தியா 4 போட்டியில் 3ல் வென்று 4ம் இடத்தில் இருக்கிறது.

மிக மோசம்

மிக மோசம்

இந்த தொடரில் இந்தியா மிகவும் வலிமையான அணியாக இருக்கிறது. இந்தியா, நியூசிலாந்து இரண்டு அணிகளும் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் இந்த அணிக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கணித்துள்ளது.

என்ன வாய்ப்பு

என்ன வாய்ப்பு

அதன்படி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். அப்படி வென்றால் இந்திய அணிக்கு ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் முன்னேற முடியும். இந்த போட்டியில் இந்தியா வென்றால் மூன்றாம் இடத்திற்கு முன்னேறும். இந்திய அணி 9 புள்ளிகளை பெறும். ஆனால் நியூசிலாந்து அணி 9 புள்ளிகளுடன் +1.591 ரன் ரேட் கொண்டு இரண்டாம் இடத்தில் உள்ளது.

செம திட்டம்

செம திட்டம்

இந்திய அணிக்கு தற்போது +1.029 ரன் ரேட் மட்டுமே இருக்கிறது. இதனால் இந்த போட்டியில் இந்திய அணி அதிக இலக்கு நிர்ணயித்து, ஆப்கானிஸ்தான் அணியை குறைந்த ரன்களில் வீழ்த்தினால், இந்திய அணி அதிக ரன் ரெட் பெறும். இதன் மூலம் இரண்டாம் இடத்திற்கு முன்னேற முடியும். இதை திட்டமிட்டுதான் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, June 22, 2019, 16:27 [IST]
Other articles published on Jun 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+