Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புறக்கணிப்பு போதும்.. அவரை ஏன் அணியில் இருந்து நீக்கினீர்கள்.. சர்ச்சைக்கு உள்ளான கோலியின் முடிவு!

Recommended Video

World Cup 2019 - கோலி செய்த 2 தவறு... சர்ச்சைக்கு உள்ளாகும் பந்துவீச்சு

லண்டன்: இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியில் செய்யப்பட்டு இருக்கும் ஒரு மாற்றம் பெரிய சர்ச்சையாகி உள்ளது.

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையில் தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் இலங்கை அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் களமிறங்க முடிவு செய்துள்ளது.

இது பவுலிங் பிட்ச் என்பதால் இங்கு தொடக்கத்தில் பேட்டிங் செய்ய கொஞ்சம் எளிதாக இருக்கும். ஆனால் சேசிங் செய்வது மிகவும் கடினம். இதனால் இந்தியா பேட்டிங் செய்யும் போது மிகவும் கடினமாக இருக்கும்.

என்ன மாற்றம்

என்ன மாற்றம்

இந்த போட்டியில் இந்திய அணியில் இருந்து முகமது ஷமி நீக்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு போட்டிகளாக இந்திய அணியில் இடம்பெற்று இருந்த ஷமி அணியில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் கடந்த நான்கு போட்டியிலும் முக்கியமான வீரராக, முக்கியமான கேம் சேஞ்சராக இருந்தவர் முகமது ஷமிதான்.

நல்ல பலம்

நல்ல பலம்

புவனேஷ்வர் குமார் காயம் அடைந்த பாகிஸ்தான் போட்டிக்கு பின் ஷமி அணிக்குள் வந்தார். இவர் அணிக்குள் வந்த பின் இந்த அணியின் பவுலிங் அதிக பலம் அடைந்தது. ஆனால் இவர் தற்போது நீக்கப்பட்டு இருக்கிறார். முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகள் எடுத்தார். இதில் ஹாட்ரிக் விக்கெட் அடக்கம். அதன்பின் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் எடுத்தார்.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் கடைசியாக நடந்த வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இவர் 1 விக்கெட்தான் எடுத்தார். அதேபோல் அதிகமாக ரன்களை கொடுத்தார். இதனால் தற்போது இவர் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். பெரும்பாலும் இந்திய அணி இரண்டு ஸ்பீட் பவுலர்களுடன் மட்டுமே களமிறங்கும் என்பதால் இவருக்கு அணியில் இனி வாய்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

ஷமி இந்த வருடம் முழுக்க சிறப்பாக விளையாடி உள்ளார். ஆனாலும் ஷமி எப்போதும் இந்திய அணி நிர்வாகத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது வழக்கம். அது இன்றும் நடந்து இருக்கிறது. நன்றாக விக்கெட் எடுத்து வந்தாலும் அவர் இப்படி புறக்கணிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையாகி உள்ளது. இவரை ஏன் இன்று கோலி நீக்கினார் என்று பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Story first published: Saturday, July 6, 2019, 21:22 [IST]
Other articles published on Jul 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+