Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பை நடக்கிறது.. சோதனை செய்ய இதுவா நேரம்.. தேவையில்லாமல் சிக்கலில் மாட்டிய இந்திய அணி!

Recommended Video

சோதனை செய்ய இதுவா நேரம்.. சிக்கலில் மாட்டிய இந்திய அணி!

லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் தேவையில்லாமல் இந்திய அணி தற்போது சர்ச்சையில் இருக்கிறது.

இந்திய அணி கொஞ்சமும் யூகிக்க முடியாமல் இந்த போட்டியில் விளையாடி வருகிறது. தொடக்க வீரர்களை வைத்தே போட்டியை வெல்வதும் நடக்கிறது.

எல்லோரும் சொதப்பிய பின் பந்து வீச்சை வைத்து வெற்றிபெறுவதும் நடக்கிறது. என்ன நடந்தாலும் கடைசியில் சிஎஸ்கே போல திரில்லாக இந்தியா தொடர் வெற்றிகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. நேற்றும் இப்படித்தான் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா வெற்றிபெற்றது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் நேற்று போட்டியிலும் இந்திய அணி மோசமாகத்தான் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் இந்தியா வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. ரோஹித் சர்மா 18 ரன்கள் இருக்கும் போது அவுட்டானார். அதே போல் கே எல் ராகுல் 48 ரன்கள் இருக்கும் நேரத்தில் அவுட்டானார். விஜய் சங்கரும் 14 ரன்களுக்கு அவுட்டானார். நிலையாக ஆடுவார் என்று கருதப்பட்ட கேதார் ஜாதவும் 7 ரன்களுக்கு அவுட்டானார்.

விஜய் சங்கர் எப்படி

விஜய் சங்கர் எப்படி

இந்த போட்டியில் விஜய் சங்கர் மீது கோலி நம்பிக்கை வைத்து இருந்தார். விஜய் சங்கர் இந்த போட்டியிலாவது சரியாக ஆடுவார் என்று எல்லோரும் நினைத்தார்கள். அவரை நான்காவது இறக்கி, மீண்டும் வாய்ப்பு அளித்தால் தன்னை நிரூபிப்பார் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் நேற்று போட்டியிலும் அவர் மோசமாக சொதப்பினார்.

நேற்று என்ன

நேற்று என்ன

நேற்று முழுக்க ஆடிய அவர் பந்துகளை குடித்துவிட்டு வெறும் 14 ரன்கள்தான் எடுத்தார். இவர் சரியாக ஓவர் போடுவதில்லை என்பதால் நேற்று பவுலிங் செய்யவும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவரால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இவர் சரியாக நிலைத்து ஆடாத காரணத்தால் மிடில் ஆர்டர் கொஞ்சமும் பலம் இல்லாமல் இருக்கிறது.

சோதனை

சோதனை

இவரை மிடில் ஆர்டரில் இறக்கி சோதனை செய்து வருகிறார் கோலி. ஆனால் விஜய் சங்கரை வைத்து செய்யும் சோதனை முயற்சியை கோலி உடனே நிறுத்த வேண்டும். இது உலகக் கோப்பை தொடர். இந்த சோதனை எல்லாம் இப்போது வேண்டாம் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். அடுத்த போட்டியில் இவருக்கு வாய்ப்பு அளிக்க கூடாது என்கிறார்கள்.

மூன்று போட்டியில்

மூன்று போட்டியில்

வரிசையாக மூன்று போட்டியில் விஜய் சங்கர் சொதப்பிவிட்டார். அதனால் பேசாமல் தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்டை மிடில் ஆர்டரில் இறக்க வேண்டும். இனியும் கோலி அதிரடி காட்டாமல் வாய்ப்புகளை அள்ளி வழங்கி கொண்டு இருக்க கூடாது என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Story first published: Friday, June 28, 2019, 14:02 [IST]
Other articles published on Jun 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+