For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஒரு பிளாக் மார்க்.. கோலிக்கு கடைசி வார்னிங் அளித்த ஐசிசி.. இன்றைய போட்டியில் முக்கிய சிக்கல்!

இலங்கை அணிக்கு எதிராக இன்று நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி மிகவும் கவனமாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

Recommended Video

Last Warning for Kohli : இன்று நடக்கும் போட்டி முக்கியமானது..கோலிக்கு ஐசிசி கொடுத்த வார்னிங்- வீடியோ

லண்டன்: இலங்கை அணிக்கு எதிராக இன்று நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி மிகவும் கவனமாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இந்திய அணியின் கேப்டன் கோலி களத்தில் ஆக்ரோஷமான ஆடுவதில் பெயர்பெற்றவர். அவருக்கு கோபம் என்று வந்தால் யாரிடம் அதை காட்டுவார் என்றே தெரியாது. நடுவர்களிடம் அவர் பல முறை கோபம் அடைந்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

தற்போது இந்த கோபமே அவருக்கு எதிராக திரும்பி இருக்கிறது. ஆம் இந்த கோபம் காரணமாக அவர் இன்று நடக்கும் போட்டியில் மிகவும் அமைதியாக, சாந்தமாக விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

விதிகள் என்ன

விதிகள் என்ன

கடந்த 2016ம் ஆண்டு ஐசிசி சில புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது. அந்த விதிகளில் வீரர்கள் நடுவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. விதிகளை மீறும் வீரர்களுக்கு என்ன தண்டனை என்றும் நிறைய புதிய முறைகள் அதில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை தற்போது ஐசிசி மிக கடுமையாக கடைப்பிடித்து வருகிறது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இதை இந்திய அணியின் கேப்டன் கோலி கடந்த சில போட்டிகளாக தொடர்ந்து மீறி வருகிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு டீ மெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டது. இந்தியா ஆப்கானிஸ்தான் இடையில் நடந்த போட்டியில் 29 வது ஓவரில் ஆப்கானிஸ்தான் வீரர் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால் அதற்கு நடுவர் அலீம் டெர் விக்கெட் கொடுக்கவில்லை.

என்ன சண்டை

என்ன சண்டை

இதனால் கோலி நடுவரிடம் சண்டை போட்டார். நீண்ட நேரம் இந்த சண்டை நடந்தது. நடுவரிடம் சண்டை போட்டதன் மூலம் ஐசிசி விதி எண் 2.1ஐ கோலி மீறி இருக்கிறார். இதனால் அவருக்கு 25% வருமானம் பிடிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அவரின் மெரிட் புக்கில், ஒரு டீ மெரிட் புள்ளி (கருப்பு புள்ளிகள்) வைக்கப்பட்டு இருக்கிறது.

மீண்டும் சண்டை

மீண்டும் சண்டை

இந்த நிலையில் வங்கதேசம் இந்தியா இடையில் நடந்த போட்டியில் ஷமி ஓவரில் ஷாகிப் அல் ஹசன் இன்சைட் எட்ஜ் ஆனார். இது பார்க்க எல்பிடபிள்யூ போல இருந்தது. பேட்டில் பந்து பட்டதற்கான அறிகுறியே தெரியவில்லை. இதனால் இதற்கு கோலி எல்பிடபிள்யூ என்று விக்கெட் கேட்டார். நடுவர்கள் இதற்கு விக்கெட் கொடுக்கவில்லை.

சர்ச்சை

சர்ச்சை

இதையடுத்து கோலி ரிவ்யூ கேட்டார். ஆனால் மூன்றாவது நடுவர் இதை சோதித்து பார்த்துவிட்டு விக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார். இதையடுத்து கோலி நேராக சென்று நடுவரிடம் வாதம் செய்தார். விக்கெட் ஏன் கொடுக்கவில்லை என்று நீண்ட நேரம் கேட்டார். ஆனால் கோலியை இதற்காக ஐசிசி தண்டிக்கவில்லை. அவருக்கு எதிராக பிளாக் மார்க் எதுவும் செய்யவில்லை.

வார்னிங்

வார்னிங்

அவரை தற்போது ஐசிசி வார்னிங் மட்டுமே செய்துள்ளது. கோலி இன்னும் இரண்டு டி மெரிட் புள்ளிகளை பெற்றால் தடை பெறுவார். பெரிய தவறுகளை களத்தில் செய்தால் ஒரே நேரத்தில் இரண்டு டி மெரிட் புள்ளிகள் வழங்கப்படும். இதனால் இன்று கோலி மிகவும் கவனமாக ஆட வேண்டும்.

ஏன் இரண்டு

ஏன் இரண்டு

இன்று கோலி இன்னும் இரண்டு டி மெரிட் புள்ளிகளை பெற்றால் வரிசையாக இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாது. இன்று மட்டும் கோலி தவறு செய்தால் செமி பைனல் மற்றும் பைனலில் கோலி விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, July 6, 2019, 12:52 [IST]
Other articles published on Jul 6, 2019
English summary
ICC World Cup 2019: Why Skipper Kohli should play with more conscious in today's match against Sri Lanka.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+