கொஞ்சம் நீங்க பாருங்க.. நான் போறேன்.. கேப்டன்சியை ரோஹித்திடம் அளித்த கோலி.. நேற்று என்ன நிகழ்ந்தது?
லண்டன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி நிறைய நேரம் கேப்டன்சி செய்யாமல் பெவிலியனில் இருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
பாகிஸ்தான் இந்திய அணிக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி போருக்கு இணையாக நேற்று நடந்து முடிந்துள்ளது. இந்திய அணி எப்போதும் போல இந்த முறையும் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை தூசி தட்டி தூக்கி இருக்கிறது.
பாகிஸ்தானை மிக எளிதாக வீழ்த்தி இந்தியா தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆனால் இந்த போட்டியில் இந்திய அணிக்குள் சில சர்ச்சைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் வெற்றி
நேற்று டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தது. இதில் மொத்தம் 50 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. 40 ஓவரில் 212 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் டக் வொர்த் லீவிஸ் முறையில் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

கோலி
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியினர் பேட்டிங் செய்த போது கோலி அடிக்கடி பெவிலியனுக்கு சென்று வந்தார். அவர் நேற்று 40 ஓவர்கள் போடப்பட்ட நிலையில் 10 ஓவருக்கும் அதிகமாக ஓய்வு எடுத்தாக கூறப்படுகிறது. இதனால் அவர் களத்தில் பெரும்பாலும் காணப்படவில்லை.

என்ன செய்தார்
அவர் கேப்டன்சி பொறுப்பை ரோஹித் சர்மாவிடம் அளித்துவிட்டு சென்றார். ரோஹித் சர்மா கேப்டன் செய்த போதுதான் பாகிஸ்தான் இரண்டு மற்றும் மூன்றாவது விக்கெட்டுகளை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் கோலி
கோலி நேற்று நடந்த போட்டியில் அடிக்கடி ஓய்வு எடுத்ததற்கு நிறைய காரணம் இருக்கிறது. முதல்முறை காயத்தால் அவதிப்பட்ட புவனேஷ்வர்குமாரை சந்திக்க அவர் சென்றார். பயிற்சியாளர் சாஸ்திரி கோலியை அழைத்த காரணத்தால் அவர் உள்ளே சென்றுவிட்டு வந்தார். ஆனால் இதற்கே நீண்ட நேரம் ஆனது குறிப்பிடத்தக்கது,

சின்ன காயம்
அதேபோல் நேற்று கோலியின் கையில் பேட்டிங் செய்த போது சிறிய காயம் ஏற்பட்டது. ஆகவே இது பெரியதாக மாறி பிரச்சனையாக கூடாது என்பதால் அவர் அடிக்கடி ஓய்வு எடுத்து அதை சோதித்துக் கொண்டார். ஆனால் அவருக்கு இந்த காயத்தால் பெரிய பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications