Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.. ஆனாலும் இந்திய அணியில் தேர்வு.. மயங்கை எடுக்க இப்படியொரு காரணமா?

லண்டன்: ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியில் கூட விளையாடாத மயங்க் அகர்வால் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இதற்கான காரணங்களும் தற்போது வெளியாகி இருக்கிறது .

இந்திய அணியில் தவானை தொடர்ந்து இளம் வீரர் விஜய் சங்கரும் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருக்கிறார். கால் விரலில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.

பயிற்சியின் போது பும்ரா போட்ட யார்க்கரால் அவருக்கு கால் விரலில் காயம் ஏற்பட்டது. இவருக்கு பதிலாக இந்திய அணி புதிய வீரரை தேர்வு செய்ய திட்டமிட்டு உள்ளது.

யார் வருகிறார்

யார் வருகிறார்

இவருக்கு பதில் இந்திய அணிக்குள் மயங்க் அகர்வால் வர வாய்ப்புள்ளது. கர்நாடகாவை சேர்ந்த இவர் இதுவரை ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியது கிடையாது. இவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும்தான் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். இவருக்கு பெரிய அனுபவம் இல்லையென்றாலும் இந்திய அணி நிர்வாகம் இவரை தேர்வு செய்துள்ளது.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவை சேர்ந்த இவர் கடந்த வருடம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கினார். காயம்பட்ட பிரித்வி ஷாவிற்கு பதிலாக இறங்கினார். இரண்டு டெஸ்ட் போட்டியில் 4 இன்னிங்க்ஸ் விளையாடி 195 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு அரை சதம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் ஆட்டம்

உள்ளூர் ஆட்டம்

இவர் பிசிசிஐ நடத்தும் ரஞ்சி உட்பட உள்ளூர் முதல்தர போட்டிகளில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். அங்கு இவருக்கு 48.71 ஆவரேஜ் இருக்கிறது. இவர் 75 போட்டிகளில் 100.72 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். அதில் 12 செஞ்சுரி, 14 அரைசதம் அடக்கம்.

ஐபிஎல் போட்டி

ஐபிஎல் போட்டி

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக 13 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவர் அதில் 332 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 141.88 ஆகும். இவர் அணியில் எடுக்க இதுமட்டும் காரணம் கிடையாது. அணியில் மாற்று வீரர்களாக முதலில் பேசப்பட்டவர் ராயுடு, அக்சர் பட்டேல், நவ்தீப் சைனி மற்றும் இஷாந்த் சர்மா மட்டுமே. ஆனால் அவர்களுக்கு பதில் இவர் சேர்க்கப்பட உள்ளார்.

ஏன் அப்படி

ஏன் அப்படி

ஏனென்றால் இவர் தொடக்க வீரர். தற்போது இந்திய அணியில் மாற்று தொடக்க வீரர்கள் யாரும் இல்லை. கடந்த போட்டியில் கே எல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. ஆனாலும் அவர் விளையாடினார். ஆனால் அவர் டக் அவுட் ஆனார். அவர் தொடக்க வீரராக இறங்கி அதிகம் திணறி வருகிறார். இதனால் அவருக்கு பதில் தொடக்க வீரராக மயங்க் அகர்வால் தேர்வாக வாய்ப்புள்ளது.

தொடக்க வீரர்

தொடக்க வீரர்

அதேபோல் இவர் பவுலிங்கும் போட கூடியவர் என்பதால் கூடுதல் பலமாக இருப்பார். இதனால் இலங்கைக்கு எதிராக போட்டியில் அகர்வால் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. கே எல் ராகுல் ஓய்வு எடுக்க வாய்ப்புள்ளது அல்லது கேதார் ஜாதாவிற்கு பதில் கே எல் ராகுல் களமிறங்க வாய்ப்புள்ளது.

Story first published: Monday, July 1, 2019, 15:56 [IST]
Other articles published on Jul 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+