
ஆதிக்கம் செலுத்தி வருகிறது
இதில் இலங்கை அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் களமிறங்க முடிவு செய்துள்ளது. ஆனால் இலங்கை பேட்ஸ்மேன்கள் மோசமாக திணறி வருகிறார்கள். தொடக்கத்தில் இருந்து இந்த போட்டியில் இந்தியா அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இலங்கை 11 ஓவருக்கு உள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

என்ன சம்பவம்
இந்த நிலையில் இந்த போட்டியின் போது வானத்தில் இரண்டு விமானங்கள் பறந்தது. அதில் ஒரு விமானத்தில் பின் ''காஷ்மீருக்கு நீதி வேண்டும்'' என்று போஸ்டர் பறந்தது. இன்னொரு விமானத்திற்கு பின் ''காஷ்மீருக்கு நீதி வேண்டும் - இனப்படுகொலையை நிறுத்து'' என்று போஸ்டர் பறந்து கொண்டு இருந்தது. போட்டி நடக்கும் போதே இந்த விமானம் பறந்தது பெரிய சர்ச்சையாகி உள்ளது.
பாதுகாப்பு கேள்வி
ஐசிசி அமைப்பு இந்த சம்பவம் நடந்தது பெரிய அதிர்ச்சியை அளிப்பதாக டிவிட் செய்து இருக்கிறது. அதே சமயம் இந்த போட்டி பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பல விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதே போல விமானம் மூலம் மைதானத்தில் தாக்குதல் நடந்தால் என்ன செய்வது. வீரர்களுக்கு ஏதாவது நடந்திருந்தால் யார் பொறுப்பு. இப்படியா போட்டிக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.

சிறிய அச்சம்
இதனால் மைதானத்தில் சிறிய அளவில் அச்சம் நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் இதேபோல் ''பலுசிஸ்தான் விடுதலை வேண்டும்'' என்று பாகிஸ்தான் நாட்டிற்கு எதிராக விமானத்தின் மூலம் போஸ்டர் பறக்கவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications