
ராகுல்
எப்போதும் போல இல்லாமல் இந்த போட்டியில் கே எல் ராகுல் கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறார். உலகக் கோப்பை தொடரில் முதல்முறையாக அவர் அரை சதம் கடந்துள்ளார். அதிகமாக திணறும் இவர் இப்போது கொஞ்சம் நல்ல ஷாட்களை தேடி பிடித்து ஆடி வருகிறார். ஆனால் இன்றும் கூட வயிறு உயரத்திற்கு பந்து போட்டால் அவர் அடிக்க திணறுகிறார் என்பது வேறு விஷயம்.

என்ன காரணம்
தற்போது வரை அவர் 70 பந்துகளில் 63 ரன்கள் எடுத்துள்ளார். கே எல் ராகுல் இப்படி பார்மிற்கு திரும்பியதற்கு பின் முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. அவருக்கு வேற வாய்ப்பே இல்லை என்பதால்தான் தற்போது அதிரடியாக ஆடி வருகிறார். ஆம், இந்திய அணிக்குள் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட போகிறார் என்பதால் தற்போது ராகுல் அதிரடியாக ஆடி வருகிறார்.

மயங்க் எப்படி
மயங்க் அகர்வால் தொடக்க வீரர் என்பதால் ராகுலின் இடம் இந்திய அணியில் கேள்விக்குறியாகி உள்ளது. மயங்க் அணிக்குள் வந்தால் அவர்தான் தொடக்க வீரராக இறங்குவார். அதன்பின் கே எல் ராகுல் அணியில் 4வது இடத்திற்கு அனுப்பப்பட வாய்ப்பு உள்ளது. சமயங்களில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட கூட வாய்ப்பு இருக்கிறது. இதனால் தற்போது கண்டிப்பாக ராகுல் அதிரடியாக ஆட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

வீரர் செக்
இந்திய அணி நிர்வாகம் வைத்த இந்த செக் ராகுலை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இது தற்போது அவரின் ஆட்டத்திலும் எதிரொலித்துள்ளது. இதுதான் அவரின் மாற்றத்திற்கு பின் நடந்த சம்பவம் என்று கூறுகிறார்கள். தன்னுடைய இடம் காலி ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் தற்போது மீண்டும் அதிரடியாக ஆட தொடங்கி உள்ளார் கே எல் ராகுல்.


Click it and Unblock the Notifications