Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாவ்.. அடித்தது செம லக்.. நாளை போட்டி நடப்பதால் இந்திய அணிக்குத்தான் சாதகம்.. எப்படி தெரியுமா?

Recommended Video

நாளைக்கு போட்டி இருந்தால் இந்தியாவுக்கு லாபம்

லண்டன்: இன்று நடக்க வேண்டிய நியூசிலாந்து இந்தியா இடையிலான செமி பைனல் போட்டி நாளையும் தொடர்வதால் அது இந்திய அணிக்குத்தான் சாதகமாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது செமி பைனல் போட்டி நடந்து வருகிறது. இதில் நியூசிலாந்து அணி 46.1 ஓவர்கள் பிடித்த அந்த அணி 5 விக்கெட்டை இழந்து வெறும் 211 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த நிலையில் ஆட்டம் நடந்து கொண்டு இருக்கும் போதே அங்கு மழை பெய்தது. மழையால் தற்போது போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் போட்டி நாளை தொடர இருக்கிறது.

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

பொதுவாக ஒரு செமி பைனல் போட்டி மழை குறுக்கிட்டு மொத்தமாக வாஷ் அவுட் ஆனால் பின்வரும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். போட்டிக்கு மறுநாள் மீண்டும் செமி பைனல் போட்டி நடக்கும். மறுநாளும் மழை பெய்து, 20 ஓவருக்கு முன்பாக போட்டி முடிந்தால் ஒரே ஒரு சூப்பர் ஓவர் போடப்பட்டு போட்டி முடிவு தீர்மானிக்கப்படும்.

ஓவர் இல்லை

ஓவர் இல்லை

ஒரு ஓவர் கூட போட முடியாத நிலை ஏற்பட்டால், புள்ளி பட்டியலில் இரண்டு அணிகளில் எது அதிக புள்ளி பெற்றுள்ளதோ அணி பைனலுக்கு செல்லும். இந்த நிலையில் நாளை மீண்டும் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் போட்டி நடக்கும் போது அது புதிய போட்டியாக நடக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை போட்டி

நாளை போட்டி

ஆம் நாளை நடக்கும் போட்டி இன்றைய போட்டியின் தொடர்ச்சியாக இருக்கும். 46.1 ஓவரில் இருந்து மீண்டும் போட்டி நடக்கும். இந்திய அணி மீண்டும் அதில் இருந்து நாளை மாலை பவுலிங் போடும் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு வகையில் இந்திய அணிக்கு சாதகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து மோசம்

நியூசிலாந்து மோசம்

ஏனென்றால் நாளை 4 ஓவர்கள் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்த பின் இந்தியா உடனே பேட்டிங் களமிறங்கும். இதனால் பிட்ச் மிகவும் பிரஷ்ஷாக இருக்கும். இன்று செகண்ட் இன்னிங்ஸ் விளையாடும் அணிக்கு இருப்பது போல ஸ்லோ பிட்சாக இருக்காது. பிட்ச் நாளை இந்தியா பேட்டிங் செய்யும் போது, பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும்.

பவுலிங் நியூசிலாந்து

பவுலிங் நியூசிலாந்து

அதே சமயம் நியூசிலாந்து அணிக்கு பவுலிங் போட சிரமமாக இருக்கும். இது அதிக ஸ்கோர் எடுக்க சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். இதனால் நாளை ஒருவேளை இந்தியா பேட்டிங் இறங்கி இன்றைய போட்டியை தொடங்கினால், கண்டிப்பாக அது இந்திய அணிக்கு பெரிய சாதகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 9, 2019, 21:58 [IST]
Other articles published on Jul 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+