Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோபப்பட்ட பாக். வீரர்கள்.. புகாரளித்த இங்கிலாந்து அணி.. போட்டி முழுக்க நீடித்த பதற்றம்.. ஏன்?

Recommended Video

WC 2019: ENG Vs PAK: Wahab riyaz: 2 வருடங்களுக்கு பிறகு அசத்தல் கம் பேக் கொடுத்த வஹாப் - வீடியோ

லண்டன்: நேற்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் நடந்த போட்டியில் போட்டி முழுக்க பெரிய அளவில் பதற்றம் நீடித்தது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அதிரடியாக ஆடியது.

இதில் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 348 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய இங்கிலாந்து அணி 334 ரன்கள் எடுத்து 14 ரன்களில் அந்த அணி, பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.

மோசமான சம்பவம்

மோசமான சம்பவம்

இந்த போட்டியில் நேற்று நிறைய வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்றது. அதில் மிக முக்கியமான சம்பவம் ஒன்று பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அம்பயர்கள். மூன்றாவது அம்பயர், ரெப்ரி என்று பலர் வீரர்களை எச்சரிக்கும் அளவிற்கு முக்கியமான விஷயம் ஒன்று நடைபெற்றது.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

நேற்று முதலில் இங்கிலாந்து அணி வீரர்கள் பந்து போடும் போது, நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார்கள். இதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. பந்தை அவர்கள் வெறும் தரையில் குத்தி, குத்தி நேரத்தை வீணாக்கிக் கொண்டு இருந்தார்கள். இப்படி செய்வதன் மூலம் பந்து எளிதாக தேயும்.

 ஏன் அப்படி செய்தனர்

ஏன் அப்படி செய்தனர்

பந்து எளிதாக தேய்வதன் மூலம் நன்றாக ஸ்விங் ஆகும். நேற்று பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடி வந்தனர். பந்து ஸ்விங் ஆகாமல் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம். இதனால் பந்தை சுவிங் செய்ய வைப்பதற்காக இங்கிலாந்து வீரர்கள் இப்படி செய்தனர்.

 பாகிஸ்தான் வீரர்கள்

பாகிஸ்தான் வீரர்கள்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பாகிஸ்தான் வீரர்களும் இதேபோல் செய்தார்கள் என்பதுதான். பாகிஸ்தான் வீரர்கள் பவுலிங் செய்யும் போது, பந்தை குத்தி, குத்தி இப்படி தேய வைத்தார்கள் இதனால் பந்து எளிதாக சுழலும். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது உதவும்.

 நேரம் ஆனது

நேரம் ஆனது

இதனால் பாகிஸ்தான் பவுலர்கள் பந்து போடவும் நேரம் ஆனது. பாகிஸ்தான் பவுலர்கள் பந்து போட இங்கிலாந்து வீரர்களை விட அதிக நேரம் எடுத்தனர். முக்கியமாக 36வது ஓவரை போட அவர்கள் 20 நிமிடம் எடுத்தனர். இதனால் கோபம் அடைந்த இங்கிலாந்து வீரர்கள் அதை களத்தில் வெளிப்படையாக காட்டினார்கள். அதோடு நடுவரிடம் சென்று புகாரும் அளித்தனர்.

 நடுவர் எச்சரிக்கை

நடுவர் எச்சரிக்கை

இதனால் நடுவர் இரண்டு நாட்டு வீரர்களையும் அழைத்து பேசினார். பந்தை இப்படி செய்ய கூடாது. நீண்ட நேரம் பவுலிங் போட எடுக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார். அதன்பின்தான் பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் பவுலிங் போட சென்றார்கள். இதனால் நேற்று களத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Story first published: Tuesday, June 4, 2019, 15:05 [IST]
Other articles published on Jun 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+